பக்கம்:துளசி மாடம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 துளசி மாடம்


னான். அவர்களில் முதன்மையாகத் தேறிப் பக்குவம் பெற்றவள் கமலிதான் என்பதையும் கூறினான்.

பழத் தட்டிலிருந்து ஒரு மாதுளையையும், ஆப்பிளை யும் துளசி மாலையையும் வலது கையால் தொட்டு ஆசீர் வாதம் செய்து அவர்களிடம் தனித்தனியே அளித்தார் அவர். அவனுக்கு ஆப்பிளும், அவள் கையில் மாதுளை யும் வந்திருந்தன. இருவரையும் முகம்லர்ந்து ஆசீர்வதித் தார் அவர். சாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்தபின் புறப்பட இருந்தபோது கமலி திடீரென்று ரவியே எதிர்பாராத விதமாக ஒர் ஆட்டோகிராப் நோட்டை யும் பேனாவையும் எடுத்துப் பெரியவர்களிடம் நீட்டவே -அது சம்பிரதாயமில்லையே என்று ரவி தயங்கி நின்றான். பெரியவர்களோ முகமலர்ச்சியோடு புன் முறுவல் பூத்தபடி ஆட்டோகிராப் நோட்டின் அந்தப் பக்கத்தில் கொஞ்சம் அட்சதையையும் குங்குமத்தையும் தூவிக் கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். 'மறுபடி வாருங்கள்' என்று சைகையும் காண்பித்தார்.

படியேறி மேலே வந்ததும் ரவி கடிகாரத்தைப் பார்த்தான். காலை பத்தே முக்கால் மணி ஆகியிருந் தது. மாந்தோப்பில் வெயில் இன்னும் உறைக்கவில்லை. மடத்துப் பிரசாதங்கள், பிரசுரங்கள் அடங்கிய உறை களோடு வந்த மானேஜர், பெரியவா பேனாவைத் தொட்டு எழுதி ஆட்டோகிராப் போடறதுங்கறது எந்த நாளிலேயும் வழக்கமில்லை. ஆனாலும் இவா மேலே இருந்த பிரியத்தாலே அந்த ஆட்டோகிராப் தாளிலே அட்சதை குங்குமத்தை எடுத்துத் துரவினதே பெரிய அநுக்கிரகம்னுதான் சொல்லனும், இதுக்கு முன்னாடியும் இப்பிடி எத்தனையோ பேர் விவரம் தெரியாமல் ஆட்டோ கிராப்பை எடுத்து நீட்டியிருக்கா- ஆனால் அப்போ எல்லாம் பெரியவா மறுத்தாப் போலக் கையைத் தடுத்து நீட்டிப் போகச் சொல்லிடுவா. முதமுதலா இன்னிக்குத்தான் இப்படிச் சிரிச்சிண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/242&oldid=579958" இலிருந்து மீள்விக்கப்பட்டது