பக்கம்:துளசி மாடம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 துளசி மாடம்


மங்கலத்தை அடைந்ததால் எதிர்பார்த்ததைவிட விரை விலேயே அவள் வந்து சேர முடிந்திருந்தது. முதல் வேலையாக வசந்தி சர்மாவின் வீட்டுக்கு வந்து பெட்டி சூட்கேஸ்களுடன் கமலியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டாள். நாலு நாள் கலியாணம் முடிந்து கிருஹப்பிரவேசத்துக்காகப் புகுந்த வீட்டுக்குள் நுழைவது வரை இனிமேல் கமலி வேணு மாமா வீட்டில்தான் இருப்பதென்று முடிவாகியிருந்தது. சர்மா, வேனுமாமா இருவருமே சேர்ந்து செய்த ஏற்பாடுதான் இது.

பூர் மடத்திலிருந்து ஊருக்குத் திரும்பி வந்ததிலிருந்து ரவி தன் அம்மாவிடம் ஒரு மாறுதலைக் கவனித்து உணர மு. டி ந் த து. அவள் அ ப் பா வி ட மு. ம். அவனிடமும் பேசுவதை அறவே நிறுத்தியிருத்தாள். அவர்களாக வலுவில் போய்ப் பேச முயன்றாலும் பதில் சொல்லாமல் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள்.

'நீ மடத்துக்குப் புறப்பட்டுப்போன மறுநாளி லேர்ந்தே எங்கிட்ட இப்படித்தான் முறைச்சிண்டிருக்கா. வேனுமாமாவும் நாமும் பேசிண்டிருந்ததெல்லாம் எப்படியோ இவ காது வரை எட்டியிருக்கும்னு தோண்றது" என்றார் சர்மா. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரவியும் நினைத்தான். அன்றைக்குச் சாயங்காலமே வசந்தியை அம்மாவிடம் பேசச் சொன் னால் அவள் கோபத்துக்குக் காரணம் என்னவென்று தெளிவாகப் புரிந்துவிடுமென்று சர்மாவும் ரவியும் எண்ணினார்கள். தற்செயலாகவே அன்று மாலை வேணு மாமாவின் பெண் வசந்தி ரவி கமலி கல்யாண விஷய மாகக் காமாட்சியம்மாளிடம் பேசிப் பார்ப்பதென்று ஏற்படாகியிருந்தது. பூர் மடத்து மானேஜர் ரவி மூலம் சர்மாவுக்கு எழுதி அனுப்பியிருந்த கடிதத்தில் பெரியவர் கள் இவர்களிடம் எப்படி மிகவும் பிரியமாக நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/244&oldid=579960" இலிருந்து மீள்விக்கப்பட்டது