பக்கம்:துளசி மாடம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 245


"காலம்பர வந்தேன் மாமி மறக்காம உங்க பண்டம் லாம் வாங்கிண்டு வந்திருக்கேன்."

'கலியாணத்துக்காகப் பொறப்பட்டு வந்திருக்கி யாக்கும் ?"

குரலிலிருந்து மாமி சுபாமவாக அதைக் கேட்கி றாளா எகத்தாளமாகக் கேட்கிறாளா என்பதை வசந்தி யால் கண்டு பிடிக்க முடியாமலிருந்தது.

"நான் ஊருக்கு வரத்துக்குத் தனியா காரணம்னு ஒண்ணு வேணுமா ம்ாமி அடிக்கடி ஊருக்கும் பம்பாய்க் குமா வந்துண்டும் போயிண்டும்தானே இருக்கேன்..."

இருவருக்கும் இடையே சிறிது நேரம் எதைப் பேசுவது எப்படி மேற்கொண்டு முறியாமல் சுமுகமாக உரை யாடலை வளர்ப்பது என்று தெரியாமல் மெளனம் நிலவியது.

சிறிது நேரத்திற்குப் பின் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு குழந்தைக்குப் பழைய கதையைச் சொல்லுவது போல் காமாட்சியம்மாளே ஆரம்பித்தாள் - புருஷா அக்னி சந்தானம்னு- ஒளபாசனம் பண்ணி- நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத் திலே பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலிருந்து வளர்ற துளசியை வளர்த்துப் பூஜை பண்ணிண்டு வரோம். இந்தக் குடும்பத்தோட செளபாக் கியங்களும், லட்சுமி கடாட்சமும், விருத்தியும் நாங்க பரம்பரையாகச் சரீர சுத்தத்தோடயும் அந்தரங்கச் சுத்தத்தோடயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலே தான்னு எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே, விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது, எத்தனையோ தலைமுறைக்கு முன்னே ராணிமங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராமண சுமங்கலிக்கு தானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/247&oldid=579963" இலிருந்து மீள்விக்கப்பட்டது