பக்கம்:துளசி மாடம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 247


"போறும்டி அவளைப் பத்தியோ ரவியைப் பத்தியோ எங்கிட்டப் பேச்சே எடுக்காதே, என் வயிறு பத்திண்டு எரியறது. நம்ம ஆசாரம் அநுஷ்டானம் எதுவுமே புரியாத யாரோ ஒருத்தியை எந்த தேசத்தி லிருந்தோ இழுத்துண்டு வந்துட்டு அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவன் ஒத்தைக் கால்லே நிற்கிறதும், அதுக்கு எல்லாம் தெரிஞ்ச இந்தப் பிராமண னும் தலையாட்டறதும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக் கலை, எல்லாம் சீரழிஞ்சு குட்டிச் சுவராத்தான் டோகப் போறது. அவன் பாட்டுக்கு அவளைக் கட்டிண்டு அடுத்த மாசமே பிளேன்ல ஏறிப் பிரான்சுக்குப் போகப் போறான். மாட்டுப் பொண் வரான்னா வீட்டிலே விளக்கேத்தி வைக்க லட்சுமி வரான்னு எங்க நாள்லே சொல்லுவா...? எங்கேருந்தோ வந்துட்டு அங்கேயே திரும்பிப் புருஷனையும் இழுத்துண்டு போகப்போற யாரோ ஒருத்தி எப்பிடி இந்தாத்து லட்சுமியாக முடியும்ப2 ?" -

“மாe நீங்க எதை வேணாச் சொல்லுங்கோ, ஆனா நம்ம ஆசார அனுஷ்டானம் தெரியாதவள்னு மட்டும் கமலியைப் பத்திச் சொல்லாதீங்கோ. நம்ம குடும்பங் களிலே இப்போ வளர்ற இளம் பொண்களைவிடக் கமவி எத்தனையோ சிரேஷ்டமானவள். அவள் தெரிஞ்சிண்டி ருக்கிற அத்தனை ஆசார அநுஷ்டானம் இப்டோ நம்மள் வாளுக்குக்கூடத் தெரியுமாங்கறதே எனக்குச் சந்தேகம் மாமி அப்படியில்லேன்னாப் பெரியவாளே பூரீமடத் துக்கு அவளை வரச் சொல்லி அதுக்ரகம் பண்ணுவாளா? அவ பிரெஞ்சிலே மொழி பெயர்த்திருக்கிற ஸெளந்தரிய லஹரியையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும் பஜ கோவிந்தத்தையும் கேட்டுட்டுப் பெரியவாளே ஆர்ே வாதம் பண்ணியிருக்கான்னா அது எத்தனை பெரிய விஷயம் ? அதைப் பத்தி ஆச்சரியப்பட்டு பூரீமடத்து மானேஜரே உங்காத்து மாமாவுக்குப் பெரிசா ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/249&oldid=579965" இலிருந்து மீள்விக்கப்பட்டது