பக்கம்:துளசி மாடம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23


நிலையில் நின்று கொண்டு, "எனக்கு மனசு சரியில்லை. அப்புறமா இன்னொரு நாள் வரேன். மத்ததைப் பேசலாம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பத் த்யாராகி விட்டார். அவரைச் சமாதானப்படுத்தி மறுபடியும் உட்கார வைப்பதற்குள் வசந்திக்கும் அவள் தந்தைக்கும் போதும் போதுமென்றாகி விட்டது.

விசுவேசுவர சர்மாவுக்கு மனத்தில் அழுத்தமான சந்தேகமே விழுந்து விட்டது. வேணு மாமாவும், அவர் பெண் வசந்தியுமே இந்தக் காதல் பிரச்னையில் ரவியின் நிலையைத் தீவிரம்ாக ஆதரிக்கிறார்களோ என்று எண்ணினார் சர்மா.

உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கி அவர் நிதானப் படுகிற வரை ஒரு மாறுதலாக வேறு எதையாவது பற்றி அவரிடம் பேசலாம் என்று தோன்றியது வேணு மாமாவுக்கு !

"ஆத்தங்கரை நத்தத்துத் தென்னந் தோப்பை யாருக்குக் குத்தகை பேசியிருக்கேள் சர்மா ? இந்த வருஷம் தென்னை, மா, பலா எல்லாமே நல்ல் காய்ப்பாமே..."

"குத்தகை எதுவுமே சரியாத் தெகையலெ. நல்ல குத்தகை அமையூலேன்னா ஒரு காவல் ஏற்பாடு பண்ணிட்டு நானே சொந்தம்ாக் கவனிக்கல்ாம்னு தீர்மானம்." * -

“மடத்து நிலமெல்லாம் என்ன செய்யப் போறேள்...?"

"அதெல்லாம் எப்படியும் நல்ல மனுஷாளாப் பார்த்துக் குத்தகைக்கு அடைச்சுத்தான் ஆகணும். நெல விஷயம் வேறே. தோப்புத் துரவு விஷ்யம் வேறே. நிலத்துக்கு எப்படியும் நல்ல குத்தகை அமையும்."

"இதக்குத் தெரு சங்கரசுப்பன் இரண்டு பெண்ணுக் கும் கல்யாணம் பூண்றுத்துக்தாத நெல்ம் தோப்புத் திரிவு எல்லாத்தையும் கிரயம் பேசிட்டர்னாமே ; தெரியும் : "அப்படித்தான் யாரோ பேசிண்டா... எங்காதிலே யும் விழுந்தது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/25&oldid=579741" இலிருந்து மீள்விக்கப்பட்டது