பக்கம்:துளசி மாடம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 249


"தப்பா நான் ஒண்னும் சொல்லல்லே மாமி1 உள்ள தைத்தான் சொல்றேன், கமலி ரொம்பத் தங்கமான பொண்ணு."

"இருக்கட்டுமே.டீ. யார் வேண்டாம்னது ? தங்க ஊசீன்னா அதுக்காக அதை நாம எடுத்துக் கண்ணைக் குத்திக்கணு மா என்ன ?"

"ചി9 മേയേ அவளுக்குத் தேவதா விசுவாசம் மாமி. புராதனமான இந்தியப் பெண்மையின் கலாசாரச் சின்னம்’னு உங்களைப் பற்றி அவ எங்கிட்டச் சொல்றது வழக்கம் மாமி..."

“அதாவது சுத்தக் கர்நாடகம், மடிசஞ்சின்னு என்னைக் கேலி பண்றாளா ?” -

"ിഖ, சிவ ! அப்படியில்லே மாமி வேடிக்கைக்காகக் கூட அந்த மாதிரி அவளைப் பத்திச் சொல்லாதீங்கோ. உங்களை அவ தேவதையா மதிக்கிறா."

“...நேக்கு அவளைக் கட்டோடப் பிடிக்கலைடி."

"நீங்க அப்படிப் பாராமுகமா இருக்கக்கூடாது. மகாலட்சுமி மாதிரி சுமங்கலியா வந்திருந்து மாமா வோட மனையிலேகூட நின்னு கல்யாணத்தை நடத்தித் தரனும், நாங்க பொண்ணாத்துக்காராளா ஏத்துண்டி ருக்கோம். நீங்க கட்டாயம் வந்து நடத்தித் தரணும்..."

"இந்தத் தட்டுக் கெட்டுப்போன கல்யாணத்துக்குச் சாஸ்திரம், பொண்ணாத்துக்காரா, புள்ளையாத்துக் காராள் னு இதெல்லாம் வேற கேக்கறதாக்கும் ?"

‘மாமி நீங்க ரொம்பப் பெரியவா...மங்களமான காரியத்தைப் பத்தி உங்க வாயாலே இப்படி வார்த்தை சொல்லப்படாது. உங்களைக் கொறை சொல்ல எனக்கு அத்தனை வயசாகலை !"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/251&oldid=579967" இலிருந்து மீள்விக்கப்பட்டது