பக்கம்:துளசி மாடம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 துளசி மாடம்


-என்று வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே சர்மா வைக் கேட்டார். அப்போது அருகே இருந்த படிப்பக ஆள் ஒருவர், "ஒரு ஐயரு ரத்தவெறி பிடிச்சுப் போய் அதைச் சிந்த வைச்சாரு இன்னொருத்தரு அதைக் குடுத்துச் சரிப்படுத்தினாரு"-என்று சொன்னார். இறை முடிமணி அந்த ஆளை உறுத்துப் பார்த்தார். "இந்தா நீ கொஞ்சம் வெளியில இரு சொல்றேன். நானே பெறவு கூப்பிடுறேன்"-என்று சொல்லி அந்த ஆளைப் போகச் சொன்னார் இறைமுடிமணி. உடனே சர்மா "அவரை ஏன் கோபிச்சுக்கறே தேசிகாமணி அவர் உள்ளதைத்தானே சொல்கிறார் ?"-என்றார். ஆனால் அந்த ஆள் இறைமுடிமணியின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு உடனே வெளியேறி விட்டார். அவர் வெளியேறி யதும் இறைமுடிமணி சர்மாவிடம் கூறினார்.

"செய்யிற அக்கிரமத்தையும் செஞ்சுப்போட்டு நானும் என் ஆளுங்களும் அவரு தோப்பிலே அத்து மீறி துழைஞ்சி கலகம் பண்ணிச் சொத்துக்குச் சேதம் விளை விச்சிருக்கோம்னு போலீஸிலே புகார் பண்ணியிருக்காரு சீமாவையரு. அந்த நேரத்திலே அவரு சிவன் கோவில்ல குடும்பத்தோட அர்ச்சனையில்லே பண்ணிக்கிட்டிருந்தா ராம் தனக்கு ஆபத்துன்னாச் சாமியைக்கூடப் பொய்ச் சாட்சிக்கு இழுக்கிறானுவ"

"யாரைச் சாட்சிக்கு இழுத்தா என்ன ? அக்கிரமம் பண்றவா அழிஞ்சுதான் போயிடுவா..."

"அழிஞ்சி போகலியே விசுவேசுவரன் ! நேர்மாறா அக்கிரமத்தை எதிர்க்கப் போன நாங்களில்லே கையும் காலும் வெட்டுப்பட்டு இப்படி ஆஸ்பத்திரியிலே வந்து அழிஞ்சு கிடக்கிறோம். நாலு காசு வசதியுள்ளவன் இங்கே நியாயம், சட்டம், போலீசு எல்லாத்தையும் கூட வெலைக்கி வாங்கிட றானே ?"

"வாஸ்தவம், தெய்வத்தை தம்பறவாளைவிடப் பணத்தையும், வசதிகளையும் நம்பித் தொழிறவா தேசத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/258&oldid=579974" இலிருந்து மீள்விக்கப்பட்டது