பக்கம்:துளசி மாடம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 257


திலே அதிகமாயிட்டா. யோக்கியமாயிருக்கணும், உழைச்சுச் சம்பாதிக்கனும்கிற நம் பி க் கையே போயிடுத்து. நல்லவனாயிருக்கணும்கிற நம்பிக்கையை விட நல்லவனைப் போல இருந்துட்டாப் போறும்னு திருப்திப் படறதே அதிகமாயாச்சு-"

"வேதத்தைச் சொல்லுற வாய் பொய்யையும் சொல்லுது. சீமாவையர் கடவுளை நம்பறதைவிட அதிகமாக அகமத் அலி பாயோட பணத்தைத்தான் நம்புறாரு."

“என்னைப் பொறுத்தவரை எவன் யோக்கியனா யிருக்கானோ எவன் மத்தவனை ஏமாத்தாமே உழைச்சு வாழறானோ, எவன்கிட்டச் சூதும்,வாதும் வஞ்சனையும் இல்லியோ அவனெல்லாம் ஆஸ்தீகன்தான். எவன் அயோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தி, உழைக்காமச் சுரண்டி வாழறானோ எவன் கிட்டச் சூதும் வாதும் வஞ்சனையும் நிரம்பியிருக்கோ அவனெல்லாம்தான் நிஜமான நாஸ்தீகன் !"

"நீ சொல்றே.ஆனா உலகத்துனோட கண்ணிலே சீமாவையருதான் ஆஸ்தீகர், நான் நாஸ்தீகன். முரடன் ! ஊரோட ஒத்துப் போகாதவன்..."

"அப்படி யார் யார் நெனைக்கறாளோ தெரியாது. ஆனா நான் அப்படி உன்னைப் பத்தி நெனைக்கலே தேசிகாமணி !' * .

"நீ நெனைக்க மாட்டப்பா... அதைக்கூடப் புரிஞ்சுக்கத் தெரியாதவனா நான் ?" -

இந்த உரையாடலின்போது இருவருமே மனம் நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். இறைமுடிமணி பத்து நாட்களுக்கு மேல் ஆஸ்பத்தியில் இருக்க நேர்ந்தது. அப்படி அவர் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்த நாட்களில் சர்மா நாள் தவறாமல் ஆறுதலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/259&oldid=579975" இலிருந்து மீள்விக்கப்பட்டது