பக்கம்:துளசி மாடம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 துளசி மாடம்


இந்த விதமாகச் சிறிது நேரம் ஊர் விவகாரம் பேசிய பின் மறுபடி பழைய பேச்சை மெதுமாக ஆரம்பித்தார் வேனு மாமா,

"ஆத்திரப்பட்டு ரவியை இங்கே வரவேண்டாம்னு எழுதிடாதீங்கோ... கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்குங்கோ... உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்ங்கிறதில்லே, நீங்க மகா வித்வான். பெரிய படிப்பாளி. ஞானஸ்தர்..." -

"இதிலே எனக்கிருக்கிற தர்ம சங்கடங்கள் உங்களுக் கும் புரியனும் பல வகையிலே கிராமத்தாருக்கும் பூரீமடத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன் நான். எடுத்தேன் கவிழ்த்தேன்னு மத்தவாளை மாதிரி நான் எதையும் பண்ணிண்டு அப்புறம் ஊர்லே நிமிர்ந்து நடக்க முடியாது. ரவியைத் தவிர எனக்குக் கல்யாணத் துக்கு இன்னொரு பிள்ளையும், பொண்ணும் வேற இருக் காங்கறதை மறந்துடாதீங்கோ ! இந்தக் கிராமமும் ஜனங்களும் எப்படிப்பட்டவான்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனும்கிறதில்லே. ஊருக்குப் பயன் படற ஒரு பொது நன்மையைப் செய்யனும்கிறபோது அதுக்காக ஒண்ணா ச் சேர மாட்டா. ஊருக்குப் பயன் படாத ஒரு தனி மனுஷ விவகாரத்தைப் பெரிசு பண்ணி ஆரோதத்தை வளர்த்துக்கணும்னா அத்தனை பேரும் உடனே ஒண்ணாச் சேருவா. நல்லது உடனே புரியாது. கெட்டதை உடனே புரிஞ்சுப்பா. முக்கால்வாசி சமயங் கள்ளே நல்லதையே அவசரப்பட்டுக் கெட்டதாப் புரிஞ்சுண்டுடுவா. ரெண்டுங் கெட்டான் ஊர், ரெண்டுங் கெட்டான் மனுஷா..." -

"நீங்க சொல்றது. அத்தனையும் நியாயம்தான் சர்மா...ஆனா... உங்க பிள்ளை ரவியோட மனதை நீங்க புண்படுத்திடப் படாது. புஷ்பம் மாதிரி மனசு அவனுக்கு..."

சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் சற்று முன் திருப்பிக் கொடுத்ததும் உள்ள்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/26&oldid=579742" இலிருந்து மீள்விக்கப்பட்டது