பக்கம்:துளசி மாடம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 துளசி மாடம்


அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒருநாள் சர்மா ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டுத் திரும்பியபோது வழியில் சந்தித்த சாஸ்திரி ஒருவர் சர்மாவிடம் பேச்சுக் கொடுத்தார்-அந்தச் சாஸ்திரி சீமாவையருக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் சர்மாவாக வலுவில் பேசப் போகவில்லை, பாதையில் எதிர்ப்பட்டு அவராகத் தம்மை நிறுத்தி rேமலாபம் விசாரிக்கவே சர்மாவும் பதில் பேசினார்.

"எங்கே போயிட்டு வரேள் சர்மா ?"

"எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட சிநேகிதன் ஒருத்தன் ஒரு கலவரத்திலே வெட்டுக் காயப்பட்டு ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருக்கான்அவனைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்."

'யாரு? அந்தச் சூனா மானா'க்காரன் தானே, 'காமியில்லே தெய்வமில்லேன்னு சதா நாஸ்தீகப் பிரசாரம் பண்ணிண்டிருக்கானோ இல்லியோ, அதான் தெய்வமாப் பார்த்து இந்தத் தண்டனையை அவனுக்குக் குடுத்திருக்கு."

இதைக் கேட்டுச் சர்மாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. கடவுளின் செயல்களுக்கு இப்படிக் கொச்சையாக அர்த்தம் கற்பிக்கிற ஆஸ்திகனைவிட மோசமான நாஸ்திகன் வேறொருவன் இருக்க முடியாது என்று பட்டது அவருக்கு. தெய்வ சிந்தன்ைகளில் மிகவும் மோசமான தெய்வ நிந்தனை, கடவுள் தம்மை எதிர்த்துப் பேசுகிறவன் வீட்டில் கொலைவிழச் செய்வார், தம்மைத் துஷ்பிரசாரம் செய்கிறவனை உடனே கையைக் காலை வாங்கிப் பழி தீர்த்துக் கொள்வார்' என்று மூட பக்தியால் பாமரத்தனமாக விளக்கம் கொடுப்பதுதான். இந்த மூடத்தனமான விளக்கம் சரியாயிருந்தால் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அல்லது வெற்றி மமதையில் நிதான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/260&oldid=579976" இலிருந்து மீள்விக்கப்பட்டது