பக்கம்:துளசி மாடம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 259


மிழந்த ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியைப் போலக் கடவுளும் பழி வாங்கவும், பகை தீர்க்கவும், எங்கே: எங்கே என்று தேடித் தவித்துக் கொண்டு திரிவது போலாகிவிடும். இவ்வளவு வேதங்கள் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும் அதே சாஸ்திரி அத்தனை மெளட்டீகம் நிறைந்த ஒரு விளக்கத்தைக் கொடுத்தது. கண்டு சர்மா அப்போது அருவருப்பு அடைந்திருந்தார். அவரை விட-அவற்றை எதிர்ப்பதற்காகவே சாஸ்திரம் சம்பிரதாயங்களைப் படித்துக் கொண்ட இறைமுடி மணி இன்னும் தெளிவாகவும் பிரக்ஞையுடனும் நன்றாக வும் படித்திருப்பதாகச் சர்மாவுக்குத் தோன்றியது.

சர்மா தம் மனத்தினுள் இருந்த எரிச்சலை அமைதிப் படுத்திக் கொண்டு சாஸ்திரிகளே! நீர் சொல்றபடி வச்சுண்டுட்டாத் தனக்குக் கெடுதல் பண்றவாளையும், தன்னை எதிர்க்கிறவாளையும் எப்படா தேடிப்பிடிச்சக் கையைக் காலை வெட்டித் தண்டிக்கலாம்னு ஒருவித மான சுயநலத்தோடு தெய்வம் தயாராக் காத்துண் டிருக்கற மாதிரின்னா ஆறது?" என்றார்.

'இல்லியோ பின்னே? தெய்வம் எப்பிடிப் பொறுத்துக்கும்னேன்?'

இதைக் கேட்டுச் சாஸ்திரிகளின் மெளட் டிகத்துக் காக மட்டுமின்றி மந்த புத்திக்காகவும் சேர்த்து இரக்கப்பட்டுக் கொண்டே மேலும் அவரையே கேட்டார் சர்மா :

'பொறுமையே பூஷணம்னும் சகிப்புத் தன்மையே சத்தியம்னும் மனுஷாளுக்கெல்லாம் முன்மாதிரியாக் கத்துக்குடுக்க வேண்டிய தெய்வம், நீர் சொல்ற மாதிரி அத்தனை பொறுமையில்லாததாயும், அவசரக் குடுக்கை யாகவும் சுயநலமாகவும் இராது சாஸ்திரிகளே-'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/261&oldid=579977" இலிருந்து மீள்விக்கப்பட்டது