பக்கம்:துளசி மாடம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 261


போட்டு ஆள் கட்டோட நுழைஞ்சவன் அந்த இறைமுடி மணி. நல்லவேளையா என் குத்தகைக்காரனோட ஆள்கள் சமயத்தில் வந்து என் ஆஸ்தியைக் காப்பாத்தி யிருக்காங்க. அப்படிப்பட்ட கிராதகனுக்கு பரிஞ்சுண்டு போய் நிற்கறார் சர்மா. அவருக்கு வரவரப் புத்தியே பேதலிச்சுப் போச்சு. ஒரே அடி மேலே அடியா வரது. புள்ளை என்னடான்னாப் பிரெஞ்சுக்காரியை இழுத் துண்டு வந்து நிற்கிறான். கடைசிலே இவரே அவா ளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதாயிடுத்து. சாஸ்த்ரோக்தமா நாலு நாள் கல்யாணமாம், சாஸ்திரம் ஒரு கேடு இவருக்கு ! பண்ற கந்தரகோளம்லாம் பண்ணிட்டுச் சாஸ்திரமாம் சாஸ்திரம் !"

'அது மட்டுமில்லே சீமாவையர்வாள் ஆஸ்பத்திரி யிலே சாகக் கிடந்த அந்தக் கறுப்புச் சட்டைக் காரனுக்கு ஒடிப்போய் ரத்தம் குடுத்துக் காப்பாத்தி யிருக்கார் இவர்..."

"இவருக்குத் தாத்தா வந்தாலும் அவனைக் காப்பாத்த முடியாது சுவாமீ ! அவன் அகமத் அலி பாயைப் போய் விரோதம் பண்ணிண்டிருக்கான். பாய் கோடீசுவரன். அவரோட போட்டி போட இந்த வெறகுக் கடைக்காரனாலா ஆகும் ?" -

"ஆனா அவன் அக்ரகாரத்திலே வச்சிருக்கற பல சரக்குக் கடையிலே வியாபாரம் ரொம்ப நன்னா ஆறதுங்கறாளே ஒய் ! விலை எல்லாம் ரொம்ப நியாய மாயிருக்குங்கறா, சரக்கும் கலப்படமில்லாமே சுத்த மாகவும் நன்னாவும் இருக்காமே... எல்லாரும் பேசிக் கிறாளே..."

"சும்மா ஒரு ஸ்டண்ட் : அதெல்லாம் கொஞ்ச நாள் ஜனங்களைக் கவரணும்கறதுக்காகக் குடுப்பன். போகப் போகத்தான் சுயரூபம் தெரியும்"-என்று அதை மறுத் தார் சீமாவையர். இறைமுடி மணியைப் பற்றியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/263&oldid=579979" இலிருந்து மீள்விக்கப்பட்டது