பக்கம்:துளசி மாடம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 265


'உம்ம சிநேகிதன் அந்தப் பகுத்தறிவுப் படிப்பக ஆள் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லச் சம்மதிப் பாரா ?"

"இதிலே அவரோட சாட்சிக்கு எந்த விதத்திலே இடம் இருக்கு ? இது கோவில் குளம், பக்தி தரிசனம்னு வர்ற கேஸ், தேசிகாமணிக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது.' -

"நம்பிக்கை இருக்கறதும் இல்லாததும் வேற விஷயம். அவரோட தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அடங்கிய பகுத்தறிவுப் படிப்பகத்திலே போய்ப் பிரசங்கம் பண்றதுக்கு முந்திகூட ஏதோ கடவுள் வாழ்த்து மாதிரி ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துட்டுத்தான் கமலி பிரசங்கம் பண்ணினாள்னு கேள்விப்பட்டேன். அப்படி அவள் செஞ்சதைத் தங்களுக்குப் பிடிக்காத விஷயமா இருந்தும் ஒரு நாகரிகம் கருதி அவர் யாரும் தடுக்கலேன்னும் கேள்விப்பட்டேன்."

"இருக்கலாம், ஆனா அது இந்தக் கேஸ்-க்கு எப்படிப் பிரயோஜனப்படும் ?" .

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சர்மா : நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ ?" -

"தாராளமா வந்து சொல்லுவார். தேசிகாமணி நிஜத்தைச் சொல்றதுக்கு எங்கேயும் யார் முன்னாடியும் பயப்படறது இல்லே.' - . .

"அது போதும் எனக்கு." "பாவம் இந்தச் சீமாவையர் பண்ணுன அக்கிரமத் திலே வெட்டுக் காயம் பட்டு ஆஸ்பத்திரியிலே கெடந் துட்டு இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக் கர்ர் அந்த மனுஷன்." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/267&oldid=579983" இலிருந்து மீள்விக்கப்பட்டது