பக்கம்:துளசி மாடம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 267


குடுக்கணும்னு தான் எல்லாம் நடக்கிறது. சீமாலையர் பார்த்துண்டிருந்த பூரீ மடத்து முத்திராதிகாரி பதவி யாலே பல வகையிலே அவர் நிறைய பணம் பண்ணிக்க வழி இருந்தது. அவராலே மடத்துப் பேரே கெட்டுடும்னு பயந்து பெரியவா எங்கிட்ட அதை மாத்தினா. அதனாலே ஒரு கோபம். ரெண்டாவது. அவர் சொல்றபடி நான் கேட்டுட்டாப் பரவாயில்லேன்னு முயற்சி பண்ணிப் பார்த்தார். நெலங்களைக் குத்தகைக்கு அடைக்கிறது, மடத்து மனையை வாடகைக்கு விடறதுலே எல்லாம் அவர் சொன்னதை நான் கேக்கல்லேன்னு வேறே என் மேலே தாங்க முடியாத ஆத்திரம் அவருக்கு.'

"சீமாவையர் மட்டும் விட்னெஸ்ஸாவோ, வேறெப் படியோ பாக்ஸ்லே ஏறினார்னா இத்தனையையும் பகிரங்கமா எக்ஸ்டோஸ் பண்ணிடலாம் சர்மா..."

"அவர் சிக்கறது கஷ்டம். தண்ணிப் பாம்பு மாதிரி சுபாவம் அவருக்கு. தலையை மட்டும் வெளியிலே நீட்டுவார். கையிலே நாம கல்லை எடுத்தமோ முக் குளிச்சு ஓடிப்போய் ஒளிஞ்சுண்டுடறதுதான் அவர் வழக்கம்."

"உதாரணம் பிரமாதம் சர்மா !...இந்த மாதிரிக் கையாலாகாதவனை நல்ல பாம்போட கூட ஒப்பீட்டு நல்ல பாம்பை அநாவசியமா அவமானப்படுத்த நீர் தயாராயில்லேன்னு தெரியறது." -

"நல்ல பாம்புக்குக் கொஞ்சம் மானரோவும் உண்டு. அதை அடிக்கக் கம்பை ஓங்கினா எதிர்த்துச் சீறும் ; பட மெடுக்கும். கடிக்கக்கூட வரும்..."

சர்மா சீமாவையரைச் சித்தரித்த விதத்தைக் கேட்டு வேணுமாமா இரசித்துச் சிரித்தார். அப்புறம் சர்மா விடம் வினவினார் :

“கோயில் திருப்பணிக்குக் கமலி பேரிலே நன் கொடை கொடுத்து ரசீது வாங்கச் சொன்னேனே; அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/269&oldid=579985" இலிருந்து மீள்விக்கப்பட்டது