பக்கம்:துளசி மாடம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 துளசி மாடம்


ரைேதப் பத்திரமா வச்சிருக் ேளா ? அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ ?"

"இந்து ஆஸ்தீகப் பெருமக்களே ! இது உங்கள் திருப்பணி ; உவகையோடு முன் வந்து உதவுங்கள்’ன்னு தலைப்பிலே அச்சிட்டிருக்கான்னு நினைப்பு. அப்புறம் தேதி, பணம் குடுத்தவங்களோட பேர், கீழே தர்மகர்த் தாக்களில் ஒருத்தரோட கையெழுத்து எல்லாம் அதிலே இருக்கு ” .

"பலே! அதைப் பத்திரமா எடுத்துண்டு வந்து எங்கிட்டக் குடுத்துடும்." -

"கேஸ், விசாரணை, வாய்தான்னு ரொம்ப இழு படுமோ ? அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங் களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும் ?" .

f

"இழுபடாதுன்னு தோன்றது. பப்ளிக் இன்ட்ரஸ்ட் உள்ள அவசர விஷயம்’னு வற்புறுத்தி அவா கேஸ் போட்டிருக்கா. கமலி நுழைஞ்சதாலே கோவில் சாந் நித்யம் கெட்டு முறைப்படி தினசரி வழிபட வருகிற எல்லா இந்துக்களுக்கும் பயன்படாததாகி விட்டதுன்னும், உடனே சம்ப்ரோட்சணம் செய்தாகணும்ன்னும் தான் வழக்கு. அதனாலே கேஸை எடுத்துண்டாச்சுன்னா உடனே விசாரணை நடந்து முடிஞ்சுடறதுதான் வழக்கம். எப்பிடியும் ரெண்டுலே ஒண்னு சீக்கிரமா முடிவாயிடும்.”

27

கமலி சங்கரமங்கலத்துக்கு வந்ததிலிருந்து அவள் சம்பந்தப்பட்ட அவர் பழகியிருக்கிற மனிதர்களைப் பற்றிய விவரங்களைச் சர்மாவிடமும், ரவியினிடமும், விசாரித்து அறிந்த பின் சாட்சியமாகப் பயன்படக் கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/270&oldid=579986" இலிருந்து மீள்விக்கப்பட்டது