பக்கம்:துளசி மாடம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 275


அதற்கு முன்பு ஒன்றுமே தெரியாதென்று கொள்ளலா மல்லவா ?" என்று குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினார். "நான் அப்படிச் சொல்லவில்லையே? அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்துவிட்டு எனக்கு அதுபற்றி எந்த அளவு தெரிந்திருக்கிறதென்று அறிவதற்காக என்னை அவள் விசாரித்தாள் என்று தானே சொன்னேன்"என்றார் நாயுடு. கோர்ட்டில் ஒரு பெரிய சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.

கமலிக்குப் பரதநாட்டியம் கற்பித்த சிவராஜ நட்டு வனாரும், கர்நாடக சங்கீதம் கற்பித்த பாகவதரும் அவளுக்கு இந்துமதப் பற்றுண்டென்றும், தங்களிடம் அவள் மிகவும் குரு பக்தியோடு நடந்து கொண்டா ளென்றும் அவளது பூஜை புனஸ்காரங்களைப் பார்த்து அவளைத் தாங்கள் சாதாரண இந்துக்களைவிடச் சிறந்த இந்துவாக மதித்திருப்பதாகவும் சாட்சியமளித்தார்கள். தத்தம் வீடுகளுக்குள் நுழையும்போது வாசல் நடை யிலேயே செருப்பைக் கழற்றி விட்டுக் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டபின் பூஜையறைக்கு சென்று வழிபட்ட பின்பே அவள் கற்றுக் கொள்ளத் தொடங்கு வது வழக்கம் என்பதையும் அவர்கள் கோர்ட்டில் விவரமாகத் தெரிவித்தார்கள்.

க ைட சி யாக இறைமுடிமணி சாட்சியத்துக்கு அழைக்கப்பட்டபோது ச த் தி ய ப் பிரமாணத்தையே ‘கடவுள் ஆணையாக என்று செய்ய மறுத்து மனச் சாட்சிக்கு ஒப்ப’ என்றுதான் பண்ணினார் அவர். உடனே எதிர்த்தரப்பு வக்கீல் "கடவுள் நம்பிக்கையற்ற -மத நம்பிக்கையில்லாத அவரது சாட்சியம் இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது"- என்று வன்மையாக மறுத்தார். •

"அவரது சாட்சியத்தைக் கூறட்டும் அதன்பின் அவசியமானால் நீங்கள் அவரைக் குறுக்கு விசாரணை செய்யலாம்" என்று நீதிபதி இடையிட்டுக் கூறவே இறைமுடிமணி சாட்சியத்தைத் தொடர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/277&oldid=579993" இலிருந்து மீள்விக்கப்பட்டது