பக்கம்:துளசி மாடம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 279


எல்லாரையும்போல் ஒரு பார்வையாளராக வந்து கோர்ட்டில் அமர்ந்திருந்த சீமாவையர் அங்கிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருந்தார். -

"ஏய் விசுவேசுவரன்! பன்றதை எல்லாம் பண்ணிப் போட்டுத் தண்ணிப் பாம்பு ஒண்னுந் தெரியாத மாதிரி மெல்ல நழுவுது பார்த்தியா?" என்று சர்மா வின் காதருகே நெருங்கி முணுமுணுத்தார் இறைமுடிமணி. சீமாவ்ையரைக் குறிப்பிட்டுப் பேச அவர்கள் இருவரும் தங்களுக்குள் வைத்திருந்த பெயர் தண்ணிப் பாம்பு' என்பதாகும். கோர்ட்டிலிருந்து திரும்புகிற வழியில் மார்க்கெட் முகப்பில் வாழை இலை மண்டி அருகே காரை நிறுத்திக் கல்யாணத்திற்காக இலை காய்கறி எல்லா வற்றுக்கும் வேணுமாமா அட்வான்ஸ் கொடுத்தபோது "இப்ப என்ன இதுக்கு அவசரம்? கேஸ் முடியட்டுமே?"என்று தயக்கத்தோடு இழுத்தார் சர்மா.

"கேலைப்பத்தி ஒண்னும் கவலைப்படாதியும்"என்று வேணுமாமா சர்மாவுக்கு உற்சாகமாகப் பதில் கூறினார். அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் சர்மாவையும் மற்றவர்களையும் அப்போது மிகவும் வியப்பில் ஆழ்த்தின.

28

மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடியபோது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல் வேண்டியபோது வேணுமாமா எழுந்திருந்து அதை ஆட்சேபித்தார். ஆனால் நீதிபதி அதற்கு அனுமதி யளித்ததோடு, அவரது சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் வசதியும் உங்களுக்கு இருக்கும்போது கவலை எதற்கு ?" என்று வேணுமாமா வுக்கு உணர்த்தினார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/281&oldid=579997" இலிருந்து மீள்விக்கப்பட்டது