பக்கம்:துளசி மாடம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 283


நடந்தது?"-என்று எல்லாரிடமுமே அடுத்தடுத்து ஒரே

கேள்வியைக் கேட்டார் வேனுமாமா. எல்லாரும் ஒரே தேதி நேரம் கூறியதோடு கமலியைத் தாங்க ள்

தனியேதான் கோவிலில் பார்த்ததாகவும் தெரிவித்தார்கள்.

வேணுமாமா எல்லோரிடமும் ஏன் தேதி நேரம் கேட்

கிறார் என்பது எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் புலப்படாமல்

பெரிய புதிராயிருந்தது.

அடுத்தபடியாகப் பஜனை மடம் பத்மநாப ஐயர், வேததர்ம பரிபாலன சபை காரியதரிசி ஹரிஹர கன பாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமி நாதன் ஆகிய நால்வரும் “கோவிலின் இரண்டாவது வது பிரகாரத்தில் உள்ள ரதி மன்மத சிற்பத்தின் கீழே அந்தச் சிற்பத்தில் எப்படி ரதியும் மன்மத னும் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார்களோ அதே போலக் கமலியும், ரவியும் பகிரங்கமாகக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும் நாலு பேராகச் சேர்ந்து தரிசனத்துக்காகப் போயிருந்த தங்கள் கண்களில் கோயிலின் புனிதத் தன்மைக்குப் பொருந்தாத இந்த அருவருக்கத்தக்க ஆபாசக் காட்சி தென்பட்டதாகவும்" ஒவ்வொருவராகக் கூண்டிலேறிச் சாட்சி கூறினார்கள். இந்த ஆபாசக் காட்சியைக் கண்டு அந்தச் சமயத்தில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டி ருந்த மற்ற ஆஸ்திகர்களின் மனம் புண்பட்டு அவர்கள் வருந்திக் கூறியதைத் தாங்கள் கேட்டதாகவும் மேலும் சாட்சிகள் தெரிவித்தார்கள். அதைக் கேட்டுக் கமலி, ரவி, சர்மா, வசந்தி ஆகியோருக்கு அந்த அபாண்டப் பழியையும் புளுகையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் நெஞ்சு குமுறியது. வேணுமாமா மட்டும் புன்முறுவ லோடு எழுந்திருந்து தன் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார். அந்த நான்கு பேரிடமும் கிளிப்பிள்ளை போல ஒரே கேள்வியைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டார் அவர்: .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/285&oldid=580001" இலிருந்து மீள்விக்கப்பட்டது