பக்கம்:துளசி மாடம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 துளசி மாடம்


"ரதி ம ன் ம த சிற்பம் சங்க்ரமங்கலம் சிவன் கோவிலின் எத்தனையாவது பிரகாரத்தில் இருக்கிறது ? எந்தத் தேதியில் எந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது ?' -

"ரதி, மன்மத சிற்பம் சிவன் கோலிலின் இரண் டாவது பிரகாரத்தின் வடக்கு மூலையில் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தேதியும் நேரமும் சொல்லத் தயங்கினார், முதலில் குறுக்கு விசாரணைக்கு ஆளான பஜனை மடம் பத்மநாப ஐயர். -

உடனே வேணுமாமா 'காலில் செருப்புடன் நுழைந்ததாக வாட்ச்மேன் சொன்ன அதே தேதியில் தான் இதுவும் நடந்ததா? அல்லது வேறு தேதியிலா? - என்று குறுக்கிட்டு விசாரித்தார்.

"வாட்ச்மேன் கூறிய சம்பவம் நடந்த அதே தேதியில் அதே நேரத்தில்தான் இதுவும் நடந்தது'-என்று சாட்சி பிடமிருந்து பதில் கிடைத்தது. மற்ற மூன்று சாட்சி களைக் குறுக்கு விசாரணை செய்தபோதும் இதே பதில்தான் அவர்களிடமிருந்து கிடைத்தது.

கடைசியாக ஒரு தர்மகர்த்தர் சாட்சியம் அளித்தார்.

கோவில் திருப்பணிக்கு என்று கமலியின் பேரில் அளிக்கப்பட்ட ரசீது கமலியால் நேரில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது அன்று என்றும் வேறு ஒருவர் பணத்தைக் கொடுத்து கோயிலுக்கு வராமல் வெளியி லேயே கமலியின் பெயருக்கு அந்த ரசீதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும்'-அவரது சாட்சியத் தில் கூறப்பட்டது. ரசீதிலிருக்கும் கையெழுத்தும் தம்முடையதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். உடனே வேனுமாமா எழுந்திருந்து,

ஐந்து ருபாய், பத்து ரூபாய் நன்கொடை வசூலுக் கான ரசீதுகளைத் தவிர நூறு ரூபாய்க்கு மேற்பட்ட ஆசூல் வேலையைத் தேவஸ்தான ஆபீளே கோவிலுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/286&oldid=580002" இலிருந்து மீள்விக்கப்பட்டது