பக்கம்:துளசி மாடம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 285


குள் வைத்துத்தான் செய்ய வேண்டும் என்று திருப்பணி நிதி வசூல் குழுவில் தீர்மானம் போட்டீர்களா இல்லையா?"-என்று கேட்டு மடக்கியதும் தர்மகர்த்தா திணறிப்போனார். நிதி வசூல் குழுவில் போடப்பட்ட அந்த இரகசியத்தீர்மானம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்பதே அவரது திணறலுக்குக் காரணம். கமலி கோவிலுக்குள் வந்து தேவஸ்தான அலுவலரிடம் பணத்தைச் செலுத்தி அந்த ரசீதை வாங்கவில்லை. வெளியே யாரோ அவள் பெயரில் பணத்தைக் கட்டி வாங்கிய ரசீது அது'-என்ற தமது பொய்ச் சாட்சியம் அடிபட்டுப் போனதைத் தர்மகர்த்தா அந்ந நிமிஷமே உணர்ந்தார்.

வற்புறுத்தித் தயாரிக்கப்பட்ட எல்லாச் சாட்சியங் களும் தவிடு பொடியாகும்படி வாதத்தைத் தொடர்ந்தார் வேனுமாமா.

“கனம் கோர்ட்டாரவர்களே! கைலாசநாதக் குருக் கள் முதலிய மூவரும் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து இங்கே இதுவரை பொய்ச் சாட்சி சொன்னார்கள் என்பதை இதோ இந்த ஒலிப்பதிவு நீ ரூபிக்கும்!'-என்று சொல்லி காலெட் ரெக்கார்டரை எடுத்து 'ஆன் செய்தார் வேணுமாமா. எள் போட்டால் எள் விழுகிற ஓசை கேட்கும் அவ்வளவு அமைதியோடு கோர்ட்டு அதைக் கேட்டது. அந்த எதிர்பாராத ஒலிப்பதிவுச் சாட்சியம் அனைவரையுமே பிரமிக்க வைத்து விட்டது. .

டேப் ஒருமுறை ஓடி முடிந்ததும் சாட்சியத்துக்குப் பயன்படும் பகுதியை மறுமுறையும் போட்டுக் காட்டினார் வேணுமாமா. கமலியின் குரல் ஒலியோடு கூடிய ஸ்லோகம் முடிந்தவுடன், -

"இவ ஸ் ேலா க ம் சொல்லிண்டிருக்கறதைக் கேட்டப்போ சரஸ்வதி தேவியே வந்து சொல்லிண்டிருக் காளோன்னு தோணித்து. இவளுக்கு எதிராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/287&oldid=580003" இலிருந்து மீள்விக்கப்பட்டது