பக்கம்:துளசி மாடம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 துளசி மாடம்


பொய் சொல்றவாளை எங்கே வேணுமானாலும் எப்பிடி வேனுமானாலும் மானத்தை வாங்கலாம் சுவாமி! அதுலே தப்பே இல்லே"-என்று தாட்சண்யமே இல்லாமல் கடுமையாக அவருக்குப் பதில் சொன்னார் வேனுமாமா. அர்ச்சகர்கள் அந்தக் கடுமையைத் தாங்கமுடியாமல் அவரை விட்டு விலகிச் சென்றனர்.

'பொய் சொல்றவாளுக்கு அவா சொந்த வாயும் நாக்கும் கூட ஒத்துழைக்காது. அந்த வாட்ச்மேன் கமலி புரியாத பாஷையில் பேசினாள்னு முதல்லே சொல்லிட்டு அப்புறம் தடுமாறிப் போய்த் தமிழிலேதான் பேசி னாள்னு உளறினான் பாருங்கோ. பஜனை மடம் பத்ம நாப ஐயரும் மத்தவாளும் என்னையும் கமலியையும் ரதி மன்மதச் சிற்பத்தின் கீழே ஆபாசமான நிலையிலே பார்த்ததாகப் புளுகிட்டு ரதி மன்மத சிற்பம் இரண்டா வது பிரகாரத்திலே இருக்குன்னு சாதிச்சாளே? பொய் யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமோ? நேத்து விசாரணையோடு விட்டிருந்தாலும் பரவாயில்லே இன்னிக்கு அவா வக்கீல் தயார்ப் பண்ணிக் கொண்டு வந்துவிட்ட அத்தனை சாட்சிகளும் நன்னா அசடு வழிஞ்சுட்டா'-என்றான் ரவி.

அது மட்டுமில்லேடா! கடவுள் மேலே ஆணையா

நெஜம் பேசறோம்னு பிரமாணம் பண்ணிட்டுப் பொய்

புளுகின் இந்தப் பக்த சிகாமணிகளைவிட மனச்சாட்சி மேலே ஆணையா நெஜம் பேசறே ன்னு உள்ளதை உள்ளபடியே சொன்ன அந்த நாஸ்திகன் எத்தனையோ சிலாக்கியமானவன்' என்று இறைமுடி மணியைப் புகழ்ந் தார் சர்மா. - -

அன்று கோர்ட்டில் பஜனை மடம் பத்மநாப ஐயர் முதலியவர்கள் தங்கள் வயதுக்கும் படிப்புக்கும் சாஸ்திர ஞானத்துக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் ஆபாசமாக இட்டுக் கட்டிப் புளுகிய புளுகு சர்மாவை மிகமிக மனவேதனைப் படச் செய்திருந்தது. தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/292&oldid=580008" இலிருந்து மீள்விக்கப்பட்டது