பக்கம்:துளசி மாடம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 துளசி மாடம்


நுழைஞ்சாங்கறதை நான் நம்பலே, இந்தாத்திலே அந்தப் பொண் தங்கியிருந்தப்போ நான் கவனிச்சவரை சுத்தம் ஆசார அநுஷ்டானத்திலே அவமேலே அப்பழுக்குச் சொல்ல முடியாது பாட்டி நம்ம மனுஷா இல்லே. நம்ம தேசம் இல்லே, நம்ம நிறம் இல்லேங்கறதைத் தவிர மரியாதை, அடக்க ஒடுக்கம்-பணிவு, பல்யம் இதிலெல் லாம் குத்தம் சொல்ல முடியாது."

இதைக் கேட்டு முத்துமீனாட்சிப் பாட்டியே தன் செவிகளை நம்ப முடியாமல் பேசுவது காமாட்சியம்மாள் தானா என வியந்து சந்தேகத்தோடு அவள் முகத்தைப் பார்த்தாள்.

"ஏன் பாட்டி அப்பிடிக் கண்ணை இடுக்கிண்டு என்னை என்னமோ மாதிரி பார்க்கறேள்? நானா இப்படிப் பேசறேன்னு சந்தேகப்படறேளா? நமக்கு வேண்டாதவங்கறதுக்காக ஒ த் த ைர ப் பத்தி அபாண்டமாப் பொய்யும் புளுகும் பேசிடறது சரியில்லே கமலி மேலே நேக்கிருக்கிற மனஸ்தாபம் வேறே. அவளும் ரவியும் போயிருக்கச்சே பெரியவா அவ ஸ்லோகம் சொல்லிக் கேட்டுத் திருப்தியா ஆசிர்வாதம் பண்ணினார்னு இதோ எங்க பெரியம்மா கேள்விபட்டுட்டு இங்கே வந்து சொல்றா. அதை நாம கொறை சொல்ல லாமோ ? ஒருத்தரை நமக்குப் பிடிக்கல்லேன்னா இல்லாத தையும் பொல்லாததையும் எல்லாம் சொல்லிக் கோர்ட் டிலே போட்டு மானத்தை வாங்கறது இந்துரர்க் காராளுக்கு"ஒரு வழக்கமாப் போச்சு-'

"கோர்ட்டிலே அந்த வடக்குத் தெரு வேணு கோபாலன்தான் கமலிக்கும் உங்காத்துக்காரருக்கும் வக்கீலாம். கமலி பத்தரைமாத்துத் தங்கம். சாட்சாத் சரஸ்வதியோட அவதாரம்னு' வேணுகோபாலன் வீட்டிலே போய்ப் பேசிப்பிட்டு வஸ்திரதானம் வாங் கிண்டு கோர்ட்டிலே போய், "அவ கோவில் ஆசாரத் தையே கெடுத்துட்டா'ன்னு நேர் மாறாகச் சாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/298&oldid=580014" இலிருந்து மீள்விக்கப்பட்டது