பக்கம்:துளசி மாடம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 துளசி மாடம்


சிறிது நேரம் மெளனத்திற்குப் பின், சர்மாவே தொடர்ந்து பேசலானார்.

"நீங்க ரெண்டு பேரும் இப்ப நான் என்னதான் செய்யணும்னு சொல்றேள் ? சொல்லுங்கோ...? இந்த லெட்டருக்குப் பதில் எழுதணுமோ, வேண்டாமோ...? வரச் சொல்லி எழுதவும் எனக்குப் பிரியம் இல்லே. வர வேண்டாம்னு சொல்லி எ ழு த வு ம் என் மனசு துணியலே..."

சொந்தப் பிள்ளையை வர வேண்டாம்னு எழுதறத்

துக்கு உங்களுக்குப் பயித்தியம் பிடிச்சிருக்கா என்ன...? அப்பிடி எழுதற அளவுக்கு அவன்தான் பெரிசா என்ன தப்புப் பண்ணிட்டான் ?”

'இதுவரை பயித்தியம் ஒண்னும் பிடிக்கலே... நீங்களும் அவனும் படுத்தற பாட்டைப் பார்த்தா இனி மேல்தான் அதெல்லாம் பிடிக்கணும்..."

"ஏன் இப்படி எல்லாம் பேசறேள் சர்மா...? உங்க ளுக்குப் பகவான் கிருபையிலே ஒரு கொறையும் வராது. எல்லாம் தெய்வசங்கல்பப்படி நல்லவிதமா நடக்கும். தயவு பண்ணிக் கொஞ்சம் நான் சொல்றதை இப்போ பொறுமையா கேட்கனும் நீங்க" என்று இதமாக ஆரப்பித்தார் வேணுமாமா.

3

வேணுமாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மா விடம் சொல்லலானார்:

'ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்தி லிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன்கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக் கணும். குடும்பம் என்னும் அழகிய பிணைப்புத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/30&oldid=579746" இலிருந்து மீள்விக்கப்பட்டது