பக்கம்:துளசி மாடம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

"இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற் கும், வளர்ப்பநற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடை யாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்பு முள்ள தனி மனிதர்களால் ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ மட்டுமல்லாமல் ஒரு மதமே கூட வளர்ச்சி தடைபட்டுக் குன்றிப்போக முடியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் இருப்பது போல பல நாடுகள், பலவகை மக்கள் என்றில்லாமல் இந்தியாவிலும் அண்டை நாடாகிய நேபாளத்திலும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் இந்த மதம் உண்மையான பக்தி சிரத்தையோடு தன்னை அணுகி அனுசரிப்பவர்களுக்கு எல்லாம் தாராளமாகத் தன்னுள் இடமளிப்பதுதான், முறையான திட்டமிடப்பட்ட சமயம் அங்கீகரித்த கன்வர்ஷன்' அல்லது மாற்றி ஏற்றுக்கொள் ளுதல்’ என்பதின்றி அநுசரிப்பவர்களும், சுவீகரித்துக் கொள்ளுபவர்களும் கூட உள்ளே வருமாறு அனுமதிக்கும் பரந்த பண்பு இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் புதியது இல்லை. நீண்ட நாட்களாக வழக்கமான ஒன்றுதான். அன்னி பெஸண்ட் முதல் பலர் இப்படி இந்தியக் கலா சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். - -

ஏராளமான ஐரோப்பியர்கள் இப்படிப் பக்திசிரத்தை யோடு இந்து தர்மத்தை அநுசரிப்பவர்களாக மாறி இருந் திருக்கிறார்கள். இதற்குப் பல முன் மாதிரிகள் காட்ட லாம் (சில முன்மாதிரிகள் நீதிபதியால் விவரிக்கப் பட்டன) இங்கே இந்த வழக்கின் சாட்சியங்களைக் கொண்டு கவனிக்கும் போது குற்றம் என்பதாகச் சாட்டி யிருப்பவற்றுக்கு நிரூபணமில்லாததோடு அவை வேண்டு மென்றே வலிந்து தயாரிக்கப்பட்டவையாகத் தோன்று கின்றன. கமலி என்ற பிரெஞ்சுப் பெண்மணி இந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/304&oldid=580020" இலிருந்து மீள்விக்கப்பட்டது