பக்கம்:துளசி மாடம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 305


பட்ட இறைமுடிமணி, 'இந்த மாதிரிப் புரோகிதங்களை நம்பாதிங்க. பதிவுத் திருமணமோ, சீர்திருத்தத் திருமணமோ பண்ணிக்குங்கன்னு எங்க இயக்கம் ரொம்ப நாளாச் சொல்லிட்டு வாரதே இதுக்காவத்தான்"-என்று சொல்லிச் சிரித்தார். சர்மாவும் பதிலுக்கு விடவில்லை. கேட்டார்: "இப்போ அதிலே மட்டும் என்ன வாழுதாம்? தலைவர், வாழ்த்துரை வழங்குவோர்னு ஒரு புரோகித ருக்குப் பதில் ஒன்பது புரோகிதன் வந்தாச்சே ? எந்தக் கட்சி சர்க்காரோ அந்தக் க ட் சி ைய ச் சேர்ந்தவா கல்யாணம்னா மந்திரியே புரோகிதரா வந்து எல்லாம். பண்ணி வச்சுடறார்." -

"அட நல்ல ஆளுப்பா நீ ! நீயும் உன் முரண்டிலே ருந்து மாறப் போறதில்லை. நானும் என் முரண்டிலே ருந்து மாறப் போறதில்லே. விட்டுத் தள்ளு’-என்றார் இறைமுடிமணி. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் அவர்களுக்கு வந்தாலும் அவை கண்ணியமான முறை யில் இருந்தன. நட்பைப் பாதிக்கவில்லை. இவர் அவரைக் கேலி பண்ணுவதுபோல் பேசுவதும் அவர் இவரைக் கேலி பண்ணுவதுபோல் பேசுவதும் சகஜமா யிருந்தாலும் இருவரும் தங்களுக்குள் ஒரு போதும் எல்லை கடந்து போனது கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் மாலை வழித் துணை விநாயகர் கோவிலிலிருந்து அவ்வூர் வழக்கப்படி மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பிரசித்தி பெற்ற வாத்தியக் கோஷ்டியின் இரட்டைத் தவில் நாதஸ்வரக் கச்சேரி என்பதால் ஊரே அங்கு திரண்டு விட்டது.

"மாப்பிள்ளை அழைப்புக்குப் புதுசூட், ஷூ எல்லாம் ரெடி !’-என்று வசந்தி வந்து ரவியிடம் சொன்னபோது,

' வர வர பிராமணக் குடும்பங்களில் கல்யாணம் கிறதே ஒரு ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன் மாதிரி ஆயிண்டு வரது இது எப்படி நம்ம கலியாணத்திலே

து-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/307&oldid=580023" இலிருந்து மீள்விக்கப்பட்டது