பக்கம்:துளசி மாடம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 துளசி மாடம்


“என்னை யார் ஒய் கூப்பிடக் காத்துண்டிருக்கா. நீர் தான் முந்தின பூரீமடம் ஏஜண்ட். இப்போ உம்ம ஸ்க்ஸஸ் ராத்தான் சர்மாவே ஏஜெண்டா இருக்கார். உம்மையே அழைக்கல்லேன்னா என்னை யார் அழைக்கப் போறா?"என்று சீமாவையரைப் பதிலுக்குக் கேட்டார் . -

'என்னைச் சர்மா அழைக்கல்லேன்னு உமக்கு யார் சொன்னா? என் பேருக்குப் பத்திரிகை அனுப்பிச் சிருக்கார். நான்தான் போகலை. கண்ட தறுதலைக் கல்யாணத்துக்கெல்லாம் .ே பா றது எனக்குப் பிடிக்கல்லே"-என்று அத்தனை வெறுப்புக்கிடையேயும் ஐம்பமாகப் பேசினார் சீமாவையர். உள்ளுறத் தாங்க முடியாத எரிச்சல் அவருக்கு. சர்மாவை அப்படியே கடித்துத் துப்பிவிட வேண்டும்போல அவர் மேல் அத்தனை கோபம் வந்தது சீமாவையருக்கு. கேஸ் வேறு தள்ளுபடி ஆகிவிட்டதால் அந்த எரிச்சலும் கோபமும் முன்பிருந்ததைவிட இரண்டு மடங்கு ஆகி இருந்தன. எப்படியாவது சர்மாவைத் தலையெடுக்க விடாமல் பண்ணி அவமானப்படுத்திவிட வேண்டுமென்று சீமா வையரின் உள்மனம் கறுவிக் கொண்டிருந்தது.

'நாம் தான் இங்கே வேலையத்துப்போய் உட்கார்ந் திண்டு இருக்கோம். ஊரே அங்கே மாப்பிள்ளை அழைப்பிலேதான் கூடியிருக்கு. வாண வேடிக்கைக்கு மட் டும் சிவகாசிக்காராளுக்குப் பத்தாயிர ரூபாய்க்குக்காண்ட ராக்ட்டாம்; நாதஸ்வரத்துக்கு ஐயாயிரமாம்! அந்த வேணுகோபாலையர் பணத்தைத் தண்ணியாச் செல வழிக்கிறாராம். சர்மாவோட புள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அந்தப் பிரெஞ்சுக்காரியே அவள் அப்பாகிட்டே சொல்லிக் கையோட இதுக்குன்னே நிறையப் பணம் வேற கொண்டு வந்திருக்காளாம். எல்லாம் ஜாம் ஜாம்னு நடக்கறது. நீரும் நானும் வரலேன்னு அங்கே யார் ஒய் கவலைப்படறா? பெரிய பெரிய கோட்டீஸ்வர வியாபாரியெல்லாம் வேணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/310&oldid=580026" இலிருந்து மீள்விக்கப்பட்டது