பக்கம்:துளசி மாடம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 துளசி மாடம்


நிறமும், இதழ்களின் வெளுத்த ரோஸ் வண்ணமும்தான் வித்தியாசமாகத் தெரிந்தன. மையூட்டியிருந்த காரணத் தால் கமீலியின் விழிகளில்கூட அப்போது அதிக வேறு பாடு தெரியவில்லை.

திருமண நாளன்றும், அடுத்த சில நாட்களிலும் குமார், பார்வதி, இருவரும்கூடக் கலியாண வீட்டிலேயே செலவழித்துவிட்டதால், காமாட்சியம்மாள் பெரியம்மா வுடனும், முத்துமீனாட்சிப் பாட்டியுடனும் வீட்டில் தனித்து விடப்பட்டாள். அந்த வீடும் கல்யாணத்துடன் சம்பந்தப்பட்டது எ ன் ப ைத க் காட்டுவதைப்போல வாசலில் குலை தள்ளிய வாழைமரங்களும், மாவிலைத் தோரணமும் கட்டப்பட்டிருந்தன. சுவரில் வெள்ளைச் சுண்ணாம்புப் பட்டைகளும், புதிய செம்மண் பட்டை களும் அடிக்கப்பட்டிருந்தன. வாசலில் செம்மண் கோலம் பெரியதாகப் போடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் உள்ளே மட்டும் நிசப்தம் நிலவியது. சில சமயங்களில் காமாட்சியம்மாளின் இருமல், முனகல் ஒலிகள் மட்டும் கேட்டன. பாட்டியின் பேச்சுக்குரல் இடையிடையே கேட்டது. மற்றப்படி வீட்டை ஒரு முறைக்காக மங்கல அடையாளங்களோடு அலங்கரித்து விட்டு வெளியூரில் நடைபெறும் கலியாணத்துக்குப் புறப் பட்டுப் போயிருந்தவர்களின் இல்லத்தைப் போலவே அரவமற்றிருந்தது அந்த வீடு. நலங்கு பஞ்சத் தேங்காய் எல்லாம் ஒரே தடபுடல் படறதாண்டி காமு! இந்த அக்கம் பக்கத்து ஊர்களிலேயே நலங்கு பாடற துலே கெட்டிக்காரின்னு பேரெடுத்தவள் நீ! ஆனா உங்காத்துப் பிள்ளை கல்யாணம் நீ போகாமலேயே நடக்கறது'-என்று முத்து மீனாட்சிப் பாட்டி காமாட்சி யம்மாளிடம் ஆரம்பித்தாள். காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதில் எதுவுமே சொல்லவில்லை. ஆயிரம் அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் வீட்டுத் தகராறு கள் பாட்டி மூலம் ஊர் வம்பாகப் பரவுவதைக் காமாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/318&oldid=580034" இலிருந்து மீள்விக்கப்பட்டது