பக்கம்:துளசி மாடம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 துளசி மாடம்


இநளியோடிய கூந்தலும் இலட்சணமான முகமும் சேர்ந்து ஒருமுறை பார்த்தவர்களை இன்னொரு முறையும் பார்க்க ஆசைப்பட வைக்கிற அழகு பார்வதிக்கு. வசந்தி பார்வதியை விசாரித்தாள் :

‘ஏண்டி...? அதுக்குள்ளே ஸ்கூல் விட்டாச்சா...? இன்னும் மணியாகலியே?" -

"நாலஞ்சு டீச்சர் லீவு மாமி! அதுனாலே லாஸ்ட் பீரியட் கிடையாதுன்னு விட்டுட்டது."

பார்வதியைத் தழுவினாற்போல உள்ளே அழைத்துச் சென்றாள் வசந்தி.

"இவ இந்த வருஷம் ஸ்கூல் ஃபைனல் முடிக்கிறா. குமார் பி. ஏ முதல் வருஷம் படிக்கிறான். காலேஜுக்காக அவன் தினசரி இருபது மைல் இரயில் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கு. நாள் தவறாமே இருட்டி ஏழு ஏழரை மணிக்குத்தான் வீடு திரும்பறான். பொண்ணை நான் காலேஜ் படிப்புக்கு அனுப்பப் போறதில்லே. பள்ளிக் கூடம் முடிஞ்சதும் கல்யாணத்துக்கு வரன் பார்க்கறதாத் தான் உத்தேசம்..."

"உள்ளுர்லியே காலேஜ் இருந்தாப் படிக்க வைக்க லாம். பெண் குழந்தைகள்-வெளியூர் போய் வர்றது சாத்தியமில்லே. பக்கத்து டவுன்ல்ே இருக்கிற ஒரே காலேஜும் கோ-எஜுகேஷன் காலேஜ். ஆணும்பொண்ணும் சேர்ந்து படிக்கிற காலேஜ், உமக்குப் பிடிக்காது." .

"எனக்குப் பிடிக்கும் பிடிக்காதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். வித்தைங்கிறது. ஞானத்தையும் விநயத்தை யும் வளர்க்கணும். இன்னிக்கு அது பெரும்பாலும் அஞ் ஞானத்தையும், முரட்டுத் தனத்தையும்தான் வளர்க் கிறது. ஒவ்வொரு பையனும் தன்னைச் சினிமாவிலே உர்ற ஹீரோவா நினைச்சிண்டு முக்காவாசி நாழி ஏதோ ஒரு தினுசான சொப்பனத்துலே வாழறான். ஒவ்வொரு சின்ன வயதுப் பெண்ணும் தன்னைச் சினிமா ஹீரோயினா நினைச்சிண்டு சீரழியறா. நிஜமா ? இல்லையா...? என்ன நான் சொல்றது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/32&oldid=579748" இலிருந்து மீள்விக்கப்பட்டது