பக்கம்:துளசி மாடம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 துளசி மாடம்


தயங்கறா. ஆனால் வெளியூர்லேயிருந்து நெறைய வைதி காளை வரவழைச்சிருக்காளாம்..."

'பொண்ணை யார் தாரை வார்த்துக் குடுத் தாளாம்."

“இதுவரை நோக்கு அது தெரியாததாடி காமு ? வேறெ யாரு அந்த வேனுகோபாலனும் அவள் ஆத்துக் காரியும்தான் தாரைவார்த்துக் குடுத்தாளாம். அதான் இந்தக் கல்யாணத்துக்காக அவாத்துலே சுமங்கலிப் பிரார்த்தனை கூட நடந்தது.துன்னேனே ?"

இதற்கு மேல் காமாட்சியம்மாளாக யாரிடமும் எது வும் வலிந்து விசாரிக்கவில்லை.

முகூர்த்தம் முடிந்த மறுநாள் பிற்பகல் பெரியம்மா அப்போதுதான் தூங்கி விழித்திருந்த காமாட்சியம்மா வரிடம் சொன்னாள்.

" உ ன் ைன ப் பார்த்துட்டுப் போறதுக்காக உங்காந்துக்கார்ரும் அந்த வேணுகோபாலனும் வந்துட்டு போனாடி காமு ! நீ நன்னா அசந்து தூங்கிண்டிருந்ததை அவாளே பார்த்தா, எழுப்பட்டுமானு கேட்டேன். "எழுப்ப வேண்டாம். துங்கட்டும் ! அப்புறமா வந்து பார்த்துக்கறோம்’னு உன் உடம் ைப் பத்தி விசாரிச்சுட்டுப் பொறப்பட்டுப் போயிட் டா."

'இவா வந்து பார்க்கல்லேன்னுதான் இப்போ குறையா ? வரலேன்னு இங்கோ யார் அழுதாளாம் ?"

'இவாள்ளாம் வரா-வரலேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ, ! நீ பத்து மாசம் சொமந்து பெத்த பிள்ளை கல்யாணத்தைப் பண்ணிண்டு ஆசீர்வாதம். பண்ணும்மா'ன்னு வந்து நமஸ்காரம் பண்ணினா னோடி ? அவனுக்கு எங்கே போச்சுடீ புத்தி ?" என்றாள் முத்துமீனாட்சிப் பாட்டி. -

வந்தா வரா, வராட்டாப் போறா. யார் வரலேன் னும் இங்கே நான் ஒண்னும் தவிக்கலே பாட்டி ?” -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/320&oldid=580036" இலிருந்து மீள்விக்கப்பட்டது