பக்கம்:துளசி மாடம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 321


நினைத்துக்கொண்டு. அவளிடம் பேசிக்கொண்டிருந் தார்கள் பாட்டியும் பெரியம்மாவும்.

ஆனால் காமாட்சியம்மாளின் உள்மனமோ கமலியை யும் ரவியையும் விதம்விதமாக மணக்கோலத்தில் கற்பனை செய்து கொண்டிருந்தது. நெற்றிச் சரமும், மாட்டலும், பின்னல் குஞ்சலமும் குண்டலமும், கூரைப் புடவையுமாகக் கமலியை நினைத்து நினைத்துத் தின் அகத்திலேயே ஒர் அழகிய மணக்கோலத்தை உருவாக்கி உருவாக்கித் திருப்தியும் அதிருப்தியுமாக மாறி மாறி அடைந்து கொண்டிருந்தது காமாட்சியம்மாளின் உள்ளம்.

"நீயானா இப்படிப் படுத்த படுக்கையாகக் கெடக் கறே படியேறி வரபோது பொண்ணையும் மாப்பிள்ளை யையும் மஞ்சநீர் சுத்திக் கொட்டி வரவேற்கறதுக்குக் கூட மனுஷா இல்லே இங்கே. உன் பொண் பாருவோ, வேனுகோபாலன் பொண் வசந்தியோ முன்னாடியே வந்து மஞ்சநீர் கரைச்சு வச்சுண்டு நின்னால்தான் உண்டு"-என்று யோசனை சொன்னாள் முத்து மீனாட்சிப் பாட்டி. . . .

"நீக்க சொல்றது. நியாயந்தான். நமக்குப் பிடிச்ச கல்யாணமோ, பிடிக்காத கலியாணமோ புள்ளை நம்மாத்துப் பிள்ளை. கல்யாணத்தைப் பண்ணிண்டு புது வேஷ்டியும் காப்புமாப் பொண்ணைக் கூட்டிண்டு வாசல்லே வந்து நின்னுட்டா வாங்கோன்னு மஞ்சநீர் சுத்திக் கொட்டி வரவேத்துத்தானே ஆகணும். வேறே என்ன பண்ணமுடியும்?" என்று பெரியம்மாவும் பாட்டி யோடு சேர்ர்ந்து கொண்டாள், உண்மையில் அந்த வி ஷய த் ைத ச் சாதகமாகவோ பாதகமாகவோ தீர்மானிக்க வேண்டிய காமாட்சியம்மாள் மட்டும் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலாதவள் போல் கண்களில் நீர் நெகிழப் படுத்திருந்தாள். பாட்டி மீண்டும்

காமாட்சியம்மாளை ஆழம் பார்த்தாள்.

து-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/323&oldid=580039" இலிருந்து மீள்விக்கப்பட்டது