பக்கம்:துளசி மாடம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 327


யும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து உட்கார்ந்திருக் கிறாளோ என்று முதலில் எண்ணித் தயங்கிய வசந்தி சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்த்த பின்பே மாமிக்கு இடைஞ்சல் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்ப தையும் அவள் தானாகவே கொஞ்சம் மனம் மாறிச் சுமுக மான நிலைமையில்தான் வந்து உட்கார்ந்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். காமாட்சியம்மாளின் இந்தச் சிறிதளவு மனமாற்றம் கூட வசந்திக்குப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எதிர்பாராத புதிய திருப்ப மாகவும் இருந்தது.

"என்ன மாமீ.குளிச்சேளா...ஈரத்தலையோட நுனி முடிச்சிப் போட்டிண்டிருக்கிற மாதிரித் தெரியறதே?" என்று மாமியின் தோற்றத்தைப் பார்த்து விசாரித்தாள் வசந்தி.

"ஆமாண்டி நல்ல நாளும் அதுவுமா அபிஷ்டு’ மாதிரிக் குளிக்காமப் படுத்துண்டிருக்க முடியறதா?”

இப்படிக் காமாட்சியம்மாள் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே

ஊர்வலமும் மனிதர்களும் வீட்டை நெருங்கி வந்திருந்தனர்.

சர்மா, ரவி, கமலி, வேனுமாமா எல்லோருக்குமே காமாட்சியம்மாளை ஆரத்தித்தட்டுடன் வாசலில் பார்த்ததும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. ஆரத்தி சுற்றிக் கொட்டும் போது பாடும் பாட்டுக்காக மேளமும் நாதஸ்வரமும் சகல வாத்தியங்களும் சில நிமிஷங்கள் ஒலிப்பது தவிர்த்து நின்றன. காமாட்சியம்மாளும் வசந்தியும்தான் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். காமாட்சியம்மாளே பாட்டும் பாடினாள். "பத்திரம்! வலது காலை எடுத்து முன்னே வச்சு உள்ளே வா..." என்று காமாட்சியம்மாளே கமலிக்குச் சொல்லி அழைத்துக் கொண்டு போனது இன்னும் நம்ப முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/329&oldid=580045" இலிருந்து மீள்விக்கப்பட்டது