பக்கம்:துளசி மாடம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 துளசி மாடம்


இருக்கு. நீயும், என் புள்ளையும் தீர்க்காயுஸா- படு செளக்கியமா இருப்பேள்- அதிலே சந்தேகமில்லே. என்னமோ என் அக்ஞானம்... நான் முரண்டு பிடிச்சேன். குறுக்கே நின்னேன். இப்போ அதை நானே மறந்துட் டேன். நீயும் மறந்துடனும், மன்னிச்சிடணும்னுகூடச் சொல்வேன்.”

"ஐயையோ நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் ரொம்பச் சிறியவள். உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியவள். நான் யாரு உங்களை மன்னிக்க ?" :

"நீ அகந்தையில்லாதவள். நிஜமான படிப்பாளி. அதுனாலேதான் நான் இத்தனை கடுமையாச் சோதனை பண்ணினப்புறமும் நீ எங்கிட்டப் பவ்யமாக இப்பிடிச் சொல்றே. பரவாயில்லே இப்போ நான் உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு மட்டும் வேண்டிக்கிறதுக்கு மீதம் இருக்கு."

"நீங்கள் வேண்டிக் கொள்ளக் கூடாது, உங்கள் மருமகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும"- "நான் வேண்டுதல்னுதான் சொல்லுவேன்ம்மா நீ உத்தரவுன்னு எடுத்துண்டா அதைப்பத்திச் சந்தோஷப் படறேன்." .

"உன்னைப்போல் நான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா உள்ளே நுழைஞ்சப்போ என் மாமியார் எனக்கு எதைச் சொன்னாளோ அதை நான் உனக்குச் சொல்லியாகனும் ! ஆனா ஒரு வித்தியாசம், நாங்கள் ளாம் இந்த தேசத்துக்காரா. நீ வேற தேசத்திலேருந்து வந்துருக்கே. இத்தத் தேசத்து ஆசார அதுi-i: களைப் புரிஞ்சுண்டிருக்கே. கொண்டாடறே, படிப்பும் புனிவம் சேர்ந்து அமையறது கஷ்டம். உங்_ை ரெண்டுமே அமைஞ்சிருக்கு " -

"எப்போது அக்கினி சாட்சியாக உங்கள்

啤,捻 * பிள்ளை யைக் கல்யாணம் செய்து கொண்டு நான் ,

உங்கள் மரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/332&oldid=580048" இலிருந்து மீள்விக்கப்பட்டது