பக்கம்:துளசி மாடம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 துளசி மாடம்


அகஸ்திய நதிக்குப் போயிட்டு வந்துடறேள். இத் ஊர்லே பிறந்து வளர்ந்த உம்ம பிள்ளை ரவியே இப்போ வர்றப்பப் பாருமே, முன்னே மாதிரி இனிமேக் கிண்த்தடி யிலேயோ, ஆத்தங்கரையிலேயோ குளிக்க மாட்டான். பாத்ரும்கிறது ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிப் போயிருக்கும் அவனுக்கு... !"

"அவாளுக்காக இனிமே நான் புதுசா ஒரு வீடே கட்டனும்கிறேளா..!" .

"நான் அப்பிடிச் சொல்லலே. மாடியிலே ஒரு தனி ரூம் டோடுங்கோ- அதை ஒட்டினாப்போல ஒரு அட்டாச்டு பாத்ரூமும் ஏற்பாடு பண்ணிடுங்கோ. န္ကို நீங்க கமலிக்காகப் பண்ணறதா நினைச்சுக்க வேண் டாம். உங்க பிள்ளையாண்டானே இப்போ இதை அவசியம்னு நினைப்டான். என் பிள்ளை சுரேஷ் ர்ெண்டு தரம் இங்கே வந்து ரெண்டு ரெண்டு நாள் தங்கினத்துக் காக, இந்த வீட்டையே நான் ரீ மாடல் பண்ணினேன், சந்தேகம்ாயிருந்தா... என் பின்னாடி வாங்கோ காமிக்கறேன்...!"

சர்மாவும் வேணுமாமாவும் உள்ளே சுற்றிப் பார்ப் பதற்குச் சென்றபோது பார்வதி எதிரே வந்தாள்.

"நான் ஆத்துக்குப் போறேன்ப்பா... நீங்க சீக்கிரமா வந்துடுங்கோ, பூமிநாதபுரம் மாமா வந்தா உட்காரச் சொல்றேன்" என்று சர்மாவிடம் சொல்லிவிட்டு, "நான் வரேன் மாமா' என்று வேணுமாமாவிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பார்வதி.

"இந்தா வசந்தி ! மாடிச் சாவியை எடுத்துண்டு வா. மாமாவுக்கு மாடியைத் திறந்து காமிப்போம் பார்க்கட்டும்." -

வசந்தி சாவிக் கொத்தைக் கொண்டு வந்து தன் தந்தையிடம் கொடுத்தாள். வெளிநாட்டில் உத்தியோகம் பார்க்கிற பிள்ளையிடமிருந்து கணிசமான தொகை மாதா மாதம் வருகிறது என்பதைத் தவிர வேணு மாமாவே நல்ல வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குச் சுரேஷ் ஒரே பிள்ளை, வசந்தி ஒரே பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/36&oldid=579752" இலிருந்து மீள்விக்கப்பட்டது