பக்கம்:துளசி மாடம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 துளசி மாடம்


அதெல்லாம் ஒண்னும் வாங்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகு, எல்லாம் தானா வந்துடும்..."

சங்கரமங்கலம் அக்கிரகாரத்தின் மூன்று தெருக் களிலும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தால் தேறக்கூடிய முதல் தரமான குடும்பத் தலைவிகளில் முத்ல் இடம் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளுக்குக் கிடைக்கும். கிருகலட்சுமி என்ற பதத் துக்குத் தனியாக இலட்சணம் சொல்லி விளக்கிக் கொண் டிருப்பதைவிட அந்த அம்மாளை அப்படியே சுட்டிக் காட்டி விடலாம். ஆனாலும், அவளுக்குக் காது கொஞ்சம் மந்தம் என்ற ஒரே காரணத்துக்காக சர்மா அவளிடம் திட்டுவதும் கூப்பாடு போடுவதும் வழக்கமா யிருந்தது. அப்படி அவர் திட்டுவதற்கும் கூப்பாடு போடுவதற்கும்கூடப் பல சமயங்களில் ஆழ்ந்த அர்த்தம் இருக்காது. அவள் மேல் தனக்கு இருக்கும் உரிமையை யும், ஆதிக்கத்தையும் காட்டும் ஒர் உணர்ச்சி வெளிப் பாடாகவே சர்மாவின் இந்த விதமான கோபதாபங்கள் அமையுமே தவிர வேறு ஆழ்ந்த பொருளோ பொருத் தமோ அவற்றுக்கு இருக்காது. அந்த அம்மாளும் அதை அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தாள். பிரியமுள்ள வரிடத்தில் பெய்யப்படும் வசைச் சொற்களுக்குப் பொருளே இருப்பதில்லை. பிரியமும் உறவும் பாசமும் ஆகிய அன்புப் பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும்போது, அப்புறம் அவற்றுக்குத் தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும்...?

சர்மாவின் கோபமும், கூப்பாடும் அவர் தன்னிடம் அப்போது ஏதோ_பேசிக் கொண்டிருக்கிறார் என்பதற் கும் அதிகமாகவோ, மேலாகவோ, வேறெந்தப் பொருளையும் காமாட்சியம்மாளின் மனதில் உண்டாக்கி யதே இல்லை. அந்த அளவு கடுஞ்சொற்களைக்கூட அநேகமிர்க அவளறிந்தவரை அவர் வேறு யாரிடமும் உரிமையோடு உபய்ோகப்படுத்துவதில்லை. தன்னைத் தான் அவர் அப்படித் திட்டுவதற்கு உரிமை கொண்டாடு கிறார் என்பதே காமாட்சியம்மாளுக்கு உள்ளுறப் பெருமைதான். கணவனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/44&oldid=579760" இலிருந்து மீள்விக்கப்பட்டது