பக்கம்:துளசி மாடம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 43


கிறோம் என்பதற்காகவே பெருமைப்படும் பழைய தலைமுறை இந்தியப் பெண்களில் ஒருத்தியாகத்தர்ன் அந்த அம்மாளும் இருந்தாள். கன்வன் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ குடும்பம் என்னும் ஆதிக்கத் திலிருந்தோ விடுபட விரும்பும் நவீன காலத்து நகர்ப்புற இந்தியப் பெண்களின் முனைப்பு அவர்கள் தலைமுறை பின் கடைக்கோடியில்கூட- இன்னும் எட்டிப் பர்ர்தி வில்லை. தங்களது சுதந்திரமும், பெருமையும், பீடும், சுகமும், துக்கமும் வீடு என்னும் எல்லுைக்குள், குடும்பம் என்னும் சாம்ராஜ்யத்துக்குள் மட்டுமே இருப்பதாக எண்ணிக் கருமம்ே கண்ணாக அந்த தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருந்தனர். கன்னியாகத் தாயாகப் பாட்டியாக அந்த எல்லைக்குள்ளேயே அவர்கள் வளைய வளைய வந்து கொண்டிருந்தார்கள் அதை விடச் சுதந்திரமும், சூகமும் உள்ள வாழ்வு ஒன்று அந்த வட்டத்துக்கு வெளியே இருப்பதுருக அவ்ர்கள் ஒரு போதும் எண்ணிப் பார்த்து ஏங்கியதில்லை.

"என்னடி காமூ ! பிள்ளையாண்டான் துரர் தேசத்துக்குப் போய் வருஷக் கணக்கிலே ஆச்சே...? வரச் சொல்லி ஒரு கால்கட்டைப் போட்டு அனுப்பப் ப_ாதோ...?" என்ற விசாரணையுடன் பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டி திண்ணையில் வந்து உட்கார்ந் தாள். பாட்டி காமாட்சியம்மாளின் காதில் விழுவதற் காக உரத்த குரலில் பேசியது தெருவில் எதிர்ச்சரகத்து வீடுகள் வரை கேட்டது.

நாள்தோறும் சந்தியா காலத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு வழக்கமாகச் சொல்லும் தோத்திரம் ஒன்றை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள், அதை முடித்துவிட்டுப் பதில் சொல்வதாகப் பாட்டியை நோக்கிச் சைகை செய்தான். பாட்டி அந்தச் சைகை புரிந்து பாருவிடம் பேச்சுக் கொடுத்தாள். "குமார் இன்னும் காலேஜிலேருந்து வரலியாடி பாரு...? டவுன்லேருந்து ஒரு சாமான் விலை விசாரிச்சுண்டு வரச்சொல்லி அவனிட்டக் காலம்பரத் கேட்டுண்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/45&oldid=579761" இலிருந்து மீள்விக்கப்பட்டது