பக்கம்:துளசி மாடம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 45


வெட்டரிவாள் மீசையுடன் அந்த நடுத்தர வயது மனிதர்

வீட்டு வாசலில் வந்து நின்றதும் பார்வதி தயங்கித்

தயங்கிப் படியிலிருந்து மெல்ல எழுந்திருந்தாள். "ஐயா இருக்காரா பாப்பா... ?' .

"இல்லியே... ? பூமிநாதபுரம் போயிருக்கார். திரும்பி வர நாழியாகும்." ར་ ཁས་པས་ས་རུ། ། “சரி பரவாயில்லே. அவரு திரும்பி வந்ததும் ஞாபகமா இறைமுடிமணி தேடி வந்தார்னு சொல்லு, மறுபடி நாளைக்கிக் காலையிலே வந்து பார்க்

கிறேன்..."

வந்தவர் போய்விட்டார். பார்வதியிடம் யாரோ பேசும் குரலைக் கேட்டுத் தலைப்பை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டு எட்டிப் பார்த்த காமாட்சி யம்மாளிடம்,

"அப்பாவைத் தேடி வந்துட்டுப் போறார்...மறுபடி காலம்பர வராறாம்...'-என்றாள் பார்வதி.

“யாருடிது...? வெறகுக் கடைத் தேசிகாமணிநாடார் குரல் மாதிரியின்னா கேட்டுது” என்று இருந்த இடத்தி விருந்தபடியே நீட்டி முழக்கி வினவினாள் முத்து மீனாட்சிப் பாட்டி.

காமாட்சியம்மாள் பார்வதியை விசாரித்துத் தெரிந்து கொண்டபின், "ஆமாம் பாட்டி! நீங்க சொன்னவர்தான். இவரைத் தேடி வந்துட்டுப் போறார்..." என்று பாட்டிக்குப் பதில் சொன்னாள். . -

“தேசிகாமணி நாடார் தானா ? அவனுக்கு விசுவேசு வரன்கிட்ட என்னடி காரியம் இருக்கும்...?” -

“என்ன காரியம்னு தெரியலே. எப்பவாவது இப்படி இவரைத் தேடிண்டு வரது உண்டு. இவரும் அவரைத் தேடிப் போறதுதான் !" -

"என்ன ஆச்சரியம்டீ, இது ?" “இதுலே ஆச்சரியம்னு என்ன இருக்கு... ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/47&oldid=579763" இலிருந்து மீள்விக்கப்பட்டது