பக்கம்:துளசி மாடம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 துளசி மாடம்


அவர்கள் காப்பி, டி போட்டுக் கொள்வதற்காகத் தனி ஸ்டவ் மேடை இருந்தது. அதையும் அவர்களேதான் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்டல்-போன்ற மண் ணெண்ணெய் அடுப்புக்கள் சமையலறைக்குள் நுழையக் கூடாது. அடுப்பாகவும், கொடியடுப்பாகவும் பிரிக்கப்பட் டிருந்த புராதனமான மண் அடுப்பு மட்டுமே சமையலறை மேடையில் இருந்தது. அந்த மண் அடுப்பு அதன் சுற்றுப்புறச் சூழல், எல்லாவற்றையுமே ஒரு கோயில் கர்ப்பக்கிருகம் போலச் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள் காமாட்சியம்மாள், கோயில் கர்ப்பக் கிருகத்துக்குள் கண்டிப்பான அதுமதி நிபந்தனைகளும், சேர்க்கக் கூடியவை-சேர்க்கக் கூடாதவை என்ற விதி களும் இருப்பது போல் அந்த வீட்டின் புராதனமான சமையலறைக்குள் விதிகள் ஆசார அதுஸ்டானங்கள் எல்லாம் இருந்தன. நேமநிஸ்டை தவறாத ஒரு முனிவரின் ஆசிரமத்தில் தங்க வந்தவர்கள் போல் மற்றவர்கள் அந்த வீட்டில் பழக வேண்டியிருந்தது.

நீண்ட காலம் வரை சர்மாவும் காப்பி, தேநீர் எதுவும் அருந்தாமல்தான் இருந்தார். அவர் காப்பி சாப்பிடத் தொடங்கிச் சில ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், அவருக்காகக் கூட அந்த வீட்டின் ஆசாரத்தை யும், சமையல்றை நிபந்தனைகளையும் காமாட்சி யம்மாள் தளர்த்தவில்லை. அவரையும் அவருடைய காப்பிப் பழக்கத்தையும் கூடத்து மேடையோடு தடுத்து நிறுத்திவிட்டாள். * -

ரவியே பாரிஸ் போகுமுன் சென்னையில் வேலை யாக இருந்தபோது ஒரு தடவை விடுமுறைக்குச் சங்கர

மங்கலம் வந்திருந்த சமயத்தில், 'அம்ம்ா, விடிஞ்சு எந்திருந்தா கோபூஜை, துளசி பூஜை, விளக்கு பூஜைன்னு வீட்டையே கோயிலாக்கிட்டே நீ. இன்ம்ே, நாங்கள் ளாம் வேற வீடு பார்த்துண்டு போயிட வேண்டியதுதான்...” என்று சிரித்துக் கொண்டே

காமாட்சிய்ம்மாளிடம் சொல்லியிருக்கிறான்.

இங்கே நிற்காதே. அ ங் ேக நிற்காதே அதைத் தொடாதே...இதைத் தொடாதே, என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/50&oldid=579766" இலிருந்து மீள்விக்கப்பட்டது