பக்கம்:துளசி மாடம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 49


அம்மா பண்ணுகிற கெடுபிடிகளில் சலிப்படைந்து அப்படிச் சொல்லியிருந்தானே ஒழிய உள்ளுற அவனுக்கும் அந்த வீட்டின் மற்ற உறுப்பின்ர்களுக்கும் காமாட்சியம்மாளின் ஆசார அநுஷ்டானங்களில் பெருமைதான். அந்த அம்மாளின் சத்திய விசுவாசத்தையும் இனிய கொள்கை முரண்டுகளையும் அவர்கள் மதித்திருக்கிறார்கள். சொல்லப் போனால் சர்மாவே பல விஷயங்களில் ஆசார அதுஷ்டானங்களைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்த தற்குக் காமாட்சியம்மாள்தான் மிகப் பெரிய துரண்டுதல்.

"காப்பியோட நிறுத்திக்குங்கோ... ஒண்ணொண் ணாக் கெடுத்துக்காதீங்கோ..." என்று அவள் அவரிடமே கேலி செய்யத் தவறுவதில்லை.

அதிகாலை இருள் பிரிந்தும் பிரியாமலும் இருக்கிற வைகறை வேளையில் நீராடிய ஈரக் கூந்தலும், திலகம் துலங்கும் பொன்நிற நெற்றியுமாக மல்லிகையும் சாம்பிராணியும் கற்பூரமும் துளசியும் மடிப்பாலும் தசாங்கமும் கமகமவென்று மணக்க அம்மா எதிரே தென் படும் போது சாட்சாத் ராஜராஜேஸ்வரியே வீட்டுக்குள் வந்து நிற்பது போல் ரவிக்குத் தோன்றும்.

அம்மாவின் ஆசார அதுஷ்டானங்கள் அசெளகரிய மாக மற்றவர்களைச் சிரமப்படுத்தியபோது கூட அவை மங்கலமான-தவிர்க்க முடியாத அசெளகரியங்களாகத் தான் அவனுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியிருக் கின்றன. அம்மா தோன்றி வளர்ந்து வந்த குடும்பம் அப்படிப்பட்ட தென்று அவன் அறிவான்.

அதே அகஸ்திய நதி தீரத்தில் சங்கரமங்கலத்திலிருந்து சில மைல் தொலைவிலிருந்த பிரம்மபுரத்தில் ஒரு வைதிக மான குடும்பத்தில் கனபாடிகள் ஒருத்தரின் ஒரே மகளாகத் தோன்றிய பெண் வேறு எப்படி இருக்க முடியும் ? அப்பா அளவிற்கு இல்லையென்றாலும் அம்மாவுக்கும் போதுமான அளவு சாஸ்திரஞானம். சமஸ்கிருத ஞானம், தமிழ்த் தோத்திரப் பாடல்களில்

து-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/51&oldid=579767" இலிருந்து மீள்விக்கப்பட்டது