பக்கம்:துளசி மாடம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 துளசி மாடம்


ஞானம் எல்லாம் உண்டு. தன் இளமையில் ஊரில் இருந்தபோது, அம்மாவின் ஆசாரங்களால் விளையும் அசெளகரியங்களுக்கு ஹோலி- இன்கன் வீனியன்ஸ் - ஆசார அசெளகரியங்கள் என்று செல்லமாக ஒரு பெயரே சூட்டியிருந்தான் ரவி. வீடே அந்த அசெளகரி யங்களில் சிறைப்பட்டிருந்தது. ஆனாலும் அதிலிருந்து விடுபட விரும்பாமல் அதை அப்படியே தொடர விரும்பியது.

ரவியின் கடிதத்தை வீட்டில் யாரும் அறிய விடாமல் சர்மா தடுந்தது காமாட்சியம்மாளுக்குப் பயந்துதான். ரவி ஒரு பிரெஞ்சு யுவதியைக் காதலிக்கிறான் என்ற உண்மை, தனக்கும் முன்னதாக ஏற்கெனவே எந்த இரண்டு பேருக்குத் தெரியுமோ, அந்த இரண்டு பேருக்கு மட்டுமே அவராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அந்தப் பிரெஞ்சு யுவதியுடன் அவன் சங்கர மங்கலத்துக்குப் புறப்பட்டு வரப் போகிறான் என்பதை அவர் வேறு யாருக்கும் தெரிவிக்கத் தயங்கினார்.

இதில் அவருக்குப் பல தர்மசங்கடங்கள் இருந்தன. வேனு மாமாவும், வசந்தியும் ரவியையும் அவனுடைய பிரெஞ்சுக் காதலியையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாலும்கூடச் சொந்த ஊரில் சொந்த வீடு இருக்கும்போது...ஏதோ ஒர் அந்நிய நாட்டு யுவதியுடன் வருகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ரவியை மற்றொருவர் வீட்டில் தங்க வைப்பது எப்படி நியாயமாயிருக்கும் என்றெண்ணி அவர் மனம் தயங்கியது.

சற்றே. லெளகீகமாகவும் கூட இந்த விஷயத்தில் அவர் யோசித்தார். அவன்மேல் உயிரையே வைத்திருக் கிற அந்தப் பெண்தான் அவனைப்பற்றி என்ன நினைப் பாள் இன்னொருவர் வீட்டில் தங்கிக்கொள்ளக் காரண மென்று அவன்தான் அந்தப்பெண்ணிடம் எதைச் சொல்ல முடியும் ? உங்கள் நாட்டில் காதல் செய்வது இவ்வளவு பெரிய, தண்டனைக்குரிய காரியமா ?’ என்று அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/52&oldid=579768" இலிருந்து மீள்விக்கப்பட்டது