பக்கம்:துளசி மாடம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 துளசி மாடம்


"இறைமணி முடியில்லேடி ! இறைமுடி மணி... அதாவது தெய்வ- சிகா- மணியங்கறதைத் தெய்வஇறை, சிகா -முடி, மணி-மணின்னு நீ வரிசைப் படுத் திக்கணும்."

'எனக்கு இப்படித்தான் சொல்ல வருது அப்பா !”

காப்பியைக் குடித்துவிட்டு அவர் தெருத் திண்ணைக்கு வரவும் இறைமுடிமணி அவரைத் தேடி வரவும் சரியா யிருந்தது.

'வணக்கம் விசுவேசுவரன்..."

"யாரு... தேசிகாமணியா... வா...'

"நேற்றே வந்தேன்... நீ பூமிநாதபுரம் போயிட் டேன் னு பாப்பா சொல்லிச்சு...”

நீராடி துனியில் முடிந்த ஈரத்தலை, நெற்றியிலும் மார்பிலும் பளீரென்று விபூதி, பஞ்சகச்சம், கழுத்தில் நவமணி மாலை சசிதம் ஒரு பரம வைதிகரும் உடம்பில் இருளாக மின்னும் கருநிறச் சட்டையும் வெட்டரிவாள் மீசையும் குண்டு முகமுமாக ஒரு சுயமரியாதைக்காரரும் அந்த அதிகாலையில் அக்ரகாரத்தில் வீட்டுத் திண்ணை யில் எதிரெதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது தெருவில் போவோர், வருவோர் கவனத்தை எல்லாம் கவர்ந்தது.

5

விசுவேசுவர சர்மாவும். இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர் நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள் வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசை களில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத் தான் செய்தது. அவர்கள் தனியேயும், தங்களுக்குள்ளே யும் பேசிக் கொள்ளும்போது இருவரும் ஒருவரை மற்றொருவர் நீ-நான்,- வா- போ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/54&oldid=579770" இலிருந்து மீள்விக்கப்பட்டது