பக்கம்:துளசி மாடம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 55


'தர்மமா இல்லையான்னு உன்னை நான் கேட்கலே நடைமுறையில் உள்ள சாத்திய அசாத்தியங்களைப் பற்றித்தான் இப்ப உன்னைக் கேட்கிறேன்."

“சாத்தியமா அசாத்தியமான்னு யோசிச்சுத் தயங்கிக் கிட்டிருக்கிறதை விடச் சாத்திப்மாகிறாப்பலே செய் துக்க வேண்டியதுதான். என்னைப் பொறுத்தவரை இத்தகைய கலப்பு உறவுகளை வரவேற்கிறேன்."மலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இறைமுடிமணி புறப்பட்டுப் போய் விட்டார்.

சர்மா யோசனை கேட்ட விஷயத்தில் சர்மாவுக்கு எது முடியும் எது முடியாது என்று எண்ணிப் பார்த்து யோசனை சொல்லாமல் ஒரு சுயமரியாதைக்காரர் என்ற முன்றயில் தன்னுடைய கொள்கைப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லி விட்டுப் போயிருந் தார் இறைமுடிமணி. நாத்திகரான இறைமுடிமணி யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டிப் பேசியது பற்றிச் சர்மா ஒரு சிறிதும் ஆச்சரியப்படாததற்குக் காரணமிருந்தது.

இறைமுடிமணி ஒர் ஆச்சரியகரமான மனிதரா யிருந்தார். சிறு வயதில் ஒரு சுயமரியாதைப் பிரசங்கத் தில் தாக்கிப் பேசுகின்ற நோக்குடன் ஒரு புராணக் கதையைத் தவறாகவும் சிறிது மாற்றியும் சொல்விய தற்காக ஒன்றை அரை குறையாகவும் தப்பாகவும் தெரிந்து கொள்வதுதான் சுயமரியாதைக்காரருக்கு இலட்சணம் போலும் என்று எதிர்த் தரப்புப் பத்திரிகை யில் அவரைத் தாக்கி எழுதியிருந்தார்கள். உடனே ஒரு முரண்டுடன் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இருந்த புராணங்களையும், காப்பியங்களையும், நீதி நூல்களை யும், தரும சாஸ்திரங்களையும், தக்கவர்கள் துணை யோடு ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கினார் அவர். இறைமுடிமணியின் அந்த நேர்மை பலரைக் கவர்ந்தது. ஒன்றைக் கண்டித்தும், தாக்கியும் பேசுவது என்றால் கூட அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/57&oldid=579773" இலிருந்து மீள்விக்கப்பட்டது