பக்கம்:துளசி மாடம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 துளசி மாடம்


பேச வேண்டும் என்று உணர்ந்த அவரது நாணயம் அவர் சார்ந்திருந்த இயக்கத்துக்கே ஒரு மதிப்பை உண்டாக். கியது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் சங்கர மங்கலத்திலும் சுற்றுப்புறத்து ஊர்களிலும் புராண இதிகாச தர்மசாஸ்திரங்களில் எதிலும் துணுக்கமான எந்த மூலையில் உள்ள எந்தக் கருத்தை விசாரிப்பது என்றாலும் ஒன்று பரம ஆத்திகராகிய சர்மாவை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது பரம நாத்திகராகிய இறைமுடிமணியை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

யாக்ஞவல்கியத்தை மேற்கோள காட்டி இறைமுடி மணி பேசிவிட்டுப் போன பின்பும் சர்மாவின் மனத். துக்குள் நெடு நேரம் வரை அந்த மேற்கோளைப் பற்றிய சிந்தனையே இருத்தது. பின் , வீட்டுக்குள்ளே போய்க் காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து இறைமுடிமணி கேட்ட காலிமனை விஷயமாக பூரீமடத் துக்குக் கடிதம் எழுதினார். சீ க் கி ர ம் கிடைக்கச் சொல்லிக் கல்லூரிக்குச் செல்லும் தன் மகன் குமாரிடம் அந்தக் கடிதத்தை உடனே கொடுத்து அனுப்பினார்.

மனம் என்னவோ இடைவிடாமல் ரவியையும் அவ னோடு வரப்போகும் அந்நிய நாட்டு யுவதியையும். பற்றியே நினைத்துக் ாொண்டிருந்தது, "ராணி மங்கம் மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரிப் பிரைவளியே இல்லாத உம்ம வீட்டிலே அவாளை எப்பிடித் தங்க. வைக்கப் போகிறீர்'-என்று வேனுமாமா கேட்டிருந்த கேள்வியும் கூடவே ஞாபகம் வந்தது. ரவியையும் அவ னோடு வருகிற பெண்ணையும் வேணுமாமா வீட்டு மாடியில் தங்க வைப்பது சரியாகவும் பொருத்தமாகவும் இராதென்று அவர் நினைத்தார். சாதாரணமாகவே வம்பு பேசக் கூடிய ஊர் இன்னும் அதிகமாக வம்பு பேசு வதற்குத்தான் அது வழி செய்யும் என்று அவருக்குத் தோன்றியது. குடும்பத்துக்கும் அவனுக்கும் பெரிய மனஸ்தாபமாம் ; அதனாலேதான் அப்பா அம்மாவோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/58&oldid=579774" இலிருந்து மீள்விக்கப்பட்டது