பக்கம்:துளசி மாடம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பூரண ஞானிகளும் விருப்பு வெறுப்பற்ற அறிவாளி களும் உலகெங்குமுள்ள மனிதர்களை இனம், நிறம், மொழி, வேறுபாடுகளைக் கருதாமல் சம திருஷ்டியோடு பார்க்கிறார்கள். சம திருஷ்டியும், சஹ்ருதயமும், பக்கு வத்தாலும் பண்பாட்டுக் கனிவு, முதிர்ச்சி ஆகிய வற்றாலுமே வருவன. அவை எல்லாருக்கும் எல்லா இடத்திலும் வந்து விடுபவை அல்ல.

சர்மாவுக்கும், இறைமுடிமணிக்கும், அறிவாலும் சம திருஷ்டியாலும் கிடைக்கும் கனிவு, சீமா வையருக்கும், பிறருக்கும் எதனாலும் எப்போதும் கிடைக்கவில்லை என்பதைத் தான் கதை நமக்குச் சொல்லுகிறது. மகாகவி பாரதி கூறுவதைப்போல்,

'கோக்கும் இடம் எங்கும் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்'

என்கிற சம தரிசனம் தான் அறிவின் முடிவான பயன். அத்தகைய சமதரிசனம் விசுவேசுவர சர்மாவுக்கு இருக் கிறது. காமாட்சியம்மாளுக்குக் கூட முடிவில் அந்தச் சம தரிசனம் வரத்தான் செய்கிறது. ஆனால், அந்தச் சம தரிசனமே அவளது முக்தியாகவும் அமைந்து விடுகிறது. கதையில்,

அத்தகைய சம தரிசனமும் மன விசாலமும் ஏற்பட இக்கதை ஒரு சிறிது உதவினாலும் அதற்காக இதை எழுதிய ஆசிரியன் பெருமகிழ்ச்சியடைய முடியும் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். . -

'தீபம்’ \ சென்னை-2 கா. பார்த்தசாரதி iT j

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/6&oldid=579719" இலிருந்து மீள்விக்கப்பட்டது