பக்கம்:துளசி மாடம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 துளசி மாடம்


யிருந்தார்கள் தனியிடம், குளியலறை இணைப்பு இவற்றை எல்லாம் ரவி கடிதத்தில் எழுதி வேண்டிக் கொண்ட பின் புதான் செய்ய வேண்டுமா என்ன ? அவன் கேட்காவிட்டாலும் நாமாகவே ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே ?'- என்றுகூட ஒரு சமயம் இவர் மனத்தில்தோன்றியது. நாமாவது கொஞ்சம் வளைந்து நெளிந்து கொடுத்து அநுசரித்துப் போய் விடலாம். ஆசார அனுஷ்டானங்களில் பிடிவாதமுள்ள அவள் பாடுதான் சிரமம். இவளுக்குப் பதில் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பதுதான் முடியாத காரியம், என்று தம் மனைவியைப் பற்றி எண்ணித் தயங்கினார் சர்மா. ரவியும் அவனோடு அந்தப் பிரெஞ்சுப் பெண்ணும் சங்கரமங்கலத்துக்கு வந்து சேருவதற்குள்ளாவது தம் மனைவிக்கு விவரத்தைச் சொல்லியாக வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர். இப்போதே காமாட்சியிடம் அதைச் சொன்னால் அவள் தற்செயலாகவோ அல்லது வாய்தவறியோ பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டியிடம் _ பிரஸ்தாபிப்பாள். முத்து மீனாட்சிப் பாட்டி உடனே ஊரெல்லாம் தமுக்கடித்தாற்போல அதைப் பரப்பிவிடுவாள் என்று பயந்தார் அவர்.

நீண்ட சிந்தனைக்குப்பின் மகன் ஊர்வந்து சேருவதற்குள் செய்யவேண்டிய _ஏற்பாடுகளைப்பற்றி இரு வழியாக அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து சேர்ந்தார். ஆவருடைய அந்த வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. பக்கவாட்டில் பசுமாடுகள் தொழுவத்துக்குப்போக ஒரு வாசல் பயன்பட்டு வந்தது. தொழுவத்துக்கு அப்பால் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். நாலைந்து மா, பலா மரங்கள், பூஞ்செடி கொடிகள் அடங்கிய தோட்டமும் ஒர் இற்வைக் கிணறும் வீட்டை ஒட்டினாற்போல் இருந்தன. தோட்டத்துக்கும் மாட்டுத் தொழுவத்துக்கும் வேலை யாட்கள் வரப்போக அந்தப் பக்கவாட்டிலிருந்த வாசல் பயன்பட்டு வந்தது. வீட்டுக் கொல்லையிலிருந்தே தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் போகலாம் என்றாலும் வெளி ஆட்கள் வரப்ப்ேரிக்ப் பயன்படுகிற வரையில் தனி வாசல் இருந்தது. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/60&oldid=579776" இலிருந்து மீள்விக்கப்பட்டது