பக்கம்:துளசி மாடம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 59


தனி வாசலில் வந்து சேருகிற விதத்தில் மாடியிலிருந்து தோதாகப் படிகள் இருந்தன. மாடியில் மரப்பலகையா லேயே அறை' மாதிரித் தடுத்து மேலே ஒரு niலிங் ...பேனும் போட்டுக் கொடுத்துவிட்டு பக்கத்து ஹாலில் அதை ஒட்டினாற் போலேயே சில நாற்காலிகள், டைனிங் டேபிள்-தேடி வருகிறவர்களைப் பார்க்கிற வசதி எல்லாம் செய்து கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருந்தார் சர்மா.

வேறுவிதமான தயக்கங்கள், தர்மசங்கடங்கள் எல்லாம் இருந்த போதிலும் மகன்மேல் உயிர் நட்புக் கொண்டு அவனை நம்பி வருகிற ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைச் சாதாரணத் தேவைகளுக்குத் தவித்துக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உறுதியாக நினைத்தார் அவர். சர்மாவுக்கு இப்போ செலவு மிச்சம். அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்என்று முதல்நாள் வேணுமாமா சொல்லியிருந்த வார்த் தைகள் வேறு சர்மாவின் ரோஷத்தைக் கிளறி விட்டி ருந்தன. நான் ஏதோ செலவு செய்யறத்துக்குத் தயங் கற மாதிரி அவர் சொல்லிக் காமிச்சுட்டாரே ?"- என்று எண்ணி வருந்தினர் சர்மா. அன்று ஏதோ ஒரு வடக்கத்திப் பண்டிகைக்காகத் தபாலாபீஸ்-பாங்குஎல்லாம் விடுமுறையாயிருந்தன. நினைத்த உடனே கொத்தனாருக்கும் மரவேலை செய்கிற மேஸ்திரிக்கும் சொல்வி அனுப்பினார் சர்மா. பாங்கை எதிர்பார்க்கா மல் உடனடிச் செலவுக்குப் போதுமான ரொக்கம் கொஞ்சம் அவர் கையிலிருந்தது. எப்போதோ மலிவாக வருகிறதென்று வாங்கிப் போட்ட தேக்குமரம் வேண்டியமட்டும் வீட்டிலேயே இருந்தது அப்போது வசதியாகப் போயிற்று. அந்த உள்ர்ைச் சுற்றி மலைப் பகுதியில் தேக்குமரம் அதிகம்.

பிற்பகலில் தச்சனும், கொத்தனாரும் வந்து அளவு கள் எடுப்பதைப் பார்த்த பின்புதான் காமாட்சியம்மாள் மெல்ல அவரை விசாரித்தாள் : "என்ன பண்ணப் போறேள் ? கட்டிட வேலைக்காராளும் மர வேலைக் காராளும் வந்திருக்காளே ?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/61&oldid=579777" இலிருந்து மீள்விக்கப்பட்டது