பக்கம்:துளசி மாடம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 65


'எனக்கென்னடி வேலை அங்கெல்லாம்? நீங்கள்ளாம் போயிட்டு வாங்கோ போறும் மனுஷா வரபோது வீட்டி லேயும் யாராவது இருந்து வான்னு சொல்லி வரவேற் கனுமோ இல்லியோ, நான் வீட்டிலே இருக்கேன்.

வசந்தி மன்றாடியது, வீணாயிற்று. சர்மா, குமார், பார்வதி, வேனுமாமா, வசந்தி ஆகியோர் இரயில் நிலை யத்துக்குப் புறப்பட்டார்கள். பே கிற வழியில் பண்டா ரத்தின் பூக்கடை வாசலில் காரை நிறுத்தி முதல் நாள் தகவல் சொல்லி வைத்திருந்தபடி அவன் கட்டிவைத்திருந்த மல்லிகைப்பூ மாலை இரண்டையும் வாங்கிக் காரில் வைத்துக் கொண்டாள் வசந்தி. அந்த வைகறை வேளை யின் குளிர்ச்சியும் மல்லிகைப்பூ வாசனையும், எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்த நாதஸ்வரம், மேளவாத்திய இன்னிசைகளும் சேர்ந்து ஊரே கல்யாண வீடானாற் போன்ற சூழ்நிலையை உருவாக்கியிருந்தன. காரில் போய்க் கொண்டிருந்த போதே வேணுமாமா வசந்தியைக்

கேட்டார்.

'மாமி ஏன் வரமாட்டேன்னுட்டா வசந்தி? ஏதாவது கோபமா?"

'தெரியலே பார்த்தால் சுமுகமாத்தான் பேசற மாதிரிப் படறது அப்பா!... ஆனா... மனசுலே என்னமோ இருக்கு...'

அதெல்லாம் ஒண்னும் இருக்காதும்மா! பிள்ளை வரான்; பாயசம், பட்சணம்னு விருந்துச் சமையல்லே தீவிரமா இருக்காளோ என்னமோ?’ என்று பேச்சை மாற்றினார் வேணுமாமா.

இரயில் சரியான நேரத்துக்கு வந்துவிட்டது. முதல் வகுப்பில் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரவியும் கமலியும் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியிலிருந்து இறங்கினார்கள். எளிய வாயில் புடவை, ரவிக்கை, குங்குமத் திலகத்துடன் எல்லாருக்கும்

து-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/67&oldid=579783" இலிருந்து மீள்விக்கப்பட்டது