பக்கம்:துளசி மாடம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 துளசி மாடம்


கைகூப்பி வணங்கினாள் கமலி. கிழக்கே சூரியோதய மாகிற வேளையில் சங்கரமங்கலம் ரயில் நிலையத்தை யொட்டி இருந்த தனவணிக வைசியர் கல்யாண மண்ட பத்தில் எந்த முகூர்த்தத்துக்காகவோ கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்தபோது, கமலியும் ரவியும் சங்கர மங்கலம் மண்ணில் கால் வைத்தார்கள், 'இவர் தான் என் தந்தை' என்று ரவி சர்மாவை அறிமுகப்படுத்தியதும் அந்தப் பிரெஞ்சு யுவதி செய்த காரியம் சர்மாவை ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

6

யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்துத் திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண் டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை ஆசீர்வாதம் செய்வது போலத்தான் சர்மா வும் அவளை வாழ்த்தியிருந்தார். சர்மாவின் மனம் ஒர் இனிய திருப்தியில் நிறைந்திருந்தது. கமலி கீழிறங்கி நின்றதும் அவளது அழகிய உடலிலிருந்து பரவிய வசீகரிக் கும் தன்மை வாய்ந்ததொரு செண்ட் டின் நறுமணம் புழுதி படிந்த அந்த ரயில் நிலையத்து பிளாட்பாரம் முழுவதும் பரவியது. பந்துக்கள் உற்றார் உறவினர்களில் யாராவது ஒர் இளம் பெண் திருமணமான புதிதில் வந்து தம்மை வணங்கினால் தயக்கமில்லாமல் என்ன ஆசீர்வாதச் சொற் களை அவர் வாய் முணுமுணுக்குமோ அதே ஆசீர்வாதச் சொற்களைத்தான் இப்போதும் கூறியிருந்தார் அவர், முயன்றால்கூட அவர் வித்தியாசமாக நடந்து கொள்ள முடியாது போலிருந்தது. இது விஷயத்தில் அவர் மனமே அவருக்கு எதிராயிருந்தது, வசந்தியைப் பார்த்ததும் கமலி அப்படியே கட்டித் தழுவிக் கொண்டாள். ரவிக்கு வேணு மாமாவும் கமலிக்கு வசந்தியும் மாலையணிவித்தனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/68&oldid=579784" இலிருந்து மீள்விக்கப்பட்டது