பக்கம்:துளசி மாடம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67


‘வெல்கம் டு சங்கரமங்கலம்'...என்று கை குலுக்குவதற்கு முன் வந்த வேணுமாமாவிடம் புன்னகை பூத்த முகத் துடன் ஹேண்ட் ஷேக்கிங் இஸ் நாட் ஆன் இண்டியன் கஸ்டம்'-என்று கூறிக் கைகூப்பினாள் கமலி. தங்கை பார்வதியையும் தம்பி குமாரையும் ரவி கமலிக்கு அறிமுகப்படுத்தினான். பார்வதியின் முதுகில் பிரியமாகத் தட்டிக் கொடுத்து அவளிடம் தமிழிலேயே பேசினாள் கமலி. குமாரிடம் அன்பாக அவன் படிப்பைப் பற்றி விசாரித்தாள். ரவி எல்லா விவரங்களையும் எல்லாப் பழக்க வழக்க முறைகளையும் அவளுக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருந்தானென்று புரிந்தது. எந்த விநாடி யிலும் எதற்கும் அவள் குழப்பமடைந்து தடுமாறவில்லை.

அங்கே புதிதாக வந்து புதிதாக முதல் முறை அறிமுக மாகிப் பேசுகிறவர்களிடம் பதில் பேசுவது போலக் கமலி பேசவில்லை. தெரிந்து பலமுறை பழகிய குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களிடம் பேசிப் பழகுவதுபோலச் சுபாவ மாகவே பேசிப் பழகினாள் அவள்.

ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது. வித்தியாசமான நிறத்தில் வித்தியாசமான நடை யுடை பாவனைகளோடு யாராவது தென்பட்டால் சிறிய ஊர்களில் ஒவ்வொருவரும் நின்று உற்றுப் பார்ப் பார்கள். இந்தியக் கிராமம் என்பது ஆவல்கள் நிறைந்தது, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு சமயத் திலும் கூர்ந்து கவனித்துவிட விரும்பும் அக்கறையும் அவகாசமும் உள்ளது. கிராமங்களின் இந்த ஆவலுக்குச் சலிப்பே கிடையாது.

சங்கரமங்கலம் இரயில் நிலையத்திலேயே அது தெரிந்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக அந்த இரயில் நிலையத்தில் போளி, ஆமவடை' என்று ஒரு சீரான குரலில் கூவி விற்று வரும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன் ஆகியவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/69&oldid=579785" இலிருந்து மீள்விக்கப்பட்டது