பக்கம்:துளசி மாடம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 துளசி மாடம்


பிறரும் அவர்களைச் சுற்றிக் கூடிய அந்தக் கும்பவில் இருந்தார்கள். அந்தப் பாதையின் வழக்கமான இரயில் பயணி ஒருவர் கண்ணை முடியபடி இரயிலுக்குள் இருந்தே போளி ஆமவடை, போளி ஆமவடை' என்று குரலைக் கேட்டே அது எந்த ஸ்டேஷன் என்று கண்டு பிடித்து விடுகிற அளவுக்கு ஒரு கால் நூற்றாண்டுக் கால மாக அங்கே ஒன்றிப் போயிருந்தார் சுப்பாராவ்.

அத்தனை பேர்களுக்கு நடுவே, என்ன சுப்பாராவ்? செளக்கியந்தானே?' என்று மறக்காமல் ஞாபகமாக ரவி தன்னை நலம் விசாரித்ததில் சுப்பாராவுக்குத் திருப்தி யும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. சுப்பாராவின வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு அதை வெளிப்படுத்தியது.

ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பும்போது வேண்டு மென்றே கமலியும், ரவியும், சர்மாவும் பின்னால் ஒரு காரில் தனியே வரும்படியாகச் செய்துவிட்டு வேனு மாமாவும், வசந்தியும் குமாரையும், பார்வதியையும் தங்களோடு அழைத்துக் கொண்டு முன்னால் புறப்பட்டு மற்றொரு காரில் வீடு திரும்பியிருந்தனர். வசந்தியையும் குமாரையும் பார்வதியையும் இறக்கிவிட்டு விட்டு வேணு மாமா அதே காரில் அப்படியே பூமிநாதபுரம் போய் விட்டார். வீட்டு வாசலில் சாதாரணமான மாக்கோலம் தான் போடப்பட்டிருந்தது, வசந்தி அதைக் கவனித்து விட்டு, 'உள்ளே போய்க் கொஞ்சம் செம்மண் கரைச் சுண்டு வாடி பாரூ! அவசரமா ஒரு செம்மண் கோலம் போடு, அப்புறம் தாம்பளத்திலே கொஞ்சம் ஆரத்தி கரைச்சுத் திண்ணையிலே தயாரா வச்சுக்கோ... பின் னாடியே அவா கார் வந்துடும். அவாளைத் தெருவிலே காக்க வச்சுடாதே"-என்று பார்வதியைத் துரிதப்படுத்தி னாள். ஏதோ வெளியூரில் கலியாணமாகி வீட்டுக்கு வருகிற பெண் மாப்பிள்ளையை வரவேற்கிறவள் போன்ற உற்சாகத்திலும் உல்லாசத்திலும் திளைத்திருந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/70&oldid=965912" இலிருந்து மீள்விக்கப்பட்டது