பக்கம்:துளசி மாடம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 69


காமாட்சி மாமி கோபித்துக் கொண்டுவிடப் போ கிறாளோ என்ற பயமும் இருந்தது. வசந்தியின் செயல் களில் எல்லாம் கம்லியின் மேலும் ரவியின் மேலும் அவளுக்கு இருந்த அளவு கடந்த பிரியம் தெரிந்து. அவர்கள் காதலை அவள் மனப் பூர்வமாக விரும்பி

ஆதரிப்புதும் தெரிந்தது.

பார்வதி அவசர அவசரமாகச் செம்மண் கரைத்துக் கொண்டு வந்தாள், கிழக்கு வெளுக்கிற நேர்ம். அப்போது கிணற்றடியில் கணிரென்ற இனிய குரலில் ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தாள் காம்ாட்சி மாமி. -

"துளசி ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே நமஸ்தே காரத நுதே நாராயண மக: ப்ரியே" மாமியின் உச்சரிப்பிலிருந்த தெளிவும் துல்லியமும் வசந்தியை மெய் சிலிர்க்க வைத்தன. வீட்டுக் காரியங்கள் நிறைய இருப்பதாகச் சொல்லிய ஒரு காரணம் பொருந் தினாலும் மாமி தான் வற்புறுத்தியும் தங்களோடு காரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வர மறுத்ததில் வேறு மனத்தாங்கல் ஏதோ இருப்பதுபோல் பட்டது வசந்திக்கு. -

கல்யாணக் கோலம் போல் பார்வதி செம்மண் பட்டைகளைப் போட்டு நிறுத்தியிருந்தாள். வசந்தி கோலப் பொடிக் கொட்டாங்கச்சியை எடுத்துக்கொண்டு போய் அந்தச் செம்மண் பட்டையைச் சுற்றிவெண்ணிறக் கோடுகளால் அழகுபடுத்தி அலங்கரித்து விட்டுப் படிக் கோலங்களையும் போட்டு முடித்தாள். அவள் கோலத்தை முடித்து விட்டுத் தலை நிமிரவும் பார்வதி ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்துக் கொண்டு உள்ளே யிருந்து வரவும் சரியாயிருந்தது.

சங்கரமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் வருகிற வழியில் பிரம்மாண்டமான அரசமரம் ஒன்றின் கீழ் புராதனமாக பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பிள்ளையாருக்கு வழித்துணை விநாயகர்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/71&oldid=579787" இலிருந்து மீள்விக்கப்பட்டது